உள்நாடு | பொருளாதாரம் | 2020-09-22 11:44:53

கல்முனையில் 'திரிய பியச' திட்டத்தின் கீழ் பயனாளிகளிடம் வீடுகள் கையளிக்கப்பட்டன.

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)  
 
'நாட்டுக்காக ஒன்றினைவோம்' எனும் தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் சமுர்த்தி திணைக்களத்தினால்  முன்னெடுக்கப்பட்ட 'திரிய பியச' வீடமைப்புத் திட்டத்தின் கீழ் மருதமுனை மற்றும் நற்பிட்டிமுனை ஆகிய இடங்களில் நிர்மாணிக்கப்பட்ட நான்கு (04) வீடுகளை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (21.09.2020) நடைபெற்றன.

மருதமுனை மற்றும் நற்பிட்டிமுனை சமூர்த்தி சமூதாய அடிப்படை வங்கி முகாமையாளர் சட்டத்தரணி எம்.எம்.எம்.முபீன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சமூர்த்தி திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்றாஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு புதிய வீடுகளை திறந்துவைத்தார்.

இந்த நிகழ்வில்; கல்முனை பிரதேச செயலகத்தின் சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சி.ஏ.நஜீம், திட்ட முகாமையாளர் ஏ.எம்.எஸ்.நயீமா உட்பட திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

'திரிய பியச' வீடமைப்புத் திட்டத்தின் கீழ் ஓவ்வொரு வருடமும் பிரதேச செயலத்தின் சமூர்த்தி திணைக்களத்தின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இவ்வாறு வீடுகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts