உள்நாடு | அரசியல் | 2020-09-22 11:29:05

கல்முனை பிராந்தியம்  வீரர்களை உருவாக்கிய மண்ணாகும் -  எச்.எம்.எம். ஹரீஸ்

(எம்.என்.எம்.அப்ராஸ்)

பால்கன் விளையாட்டுக் கழகத்தின் புதிய சீருடை அறிமுகமும்,கௌரவிப்பு நிகழ்வும் கழகத்தின் செயலாளர் எம்.எம். முகம்மது காமில் தலைமையில்
அக்ஸான் இன்ஜினீயரிங் வேர்க் நிருவாக பணிப்பாளர் அல்ஹாஜ். கே.எல்.எம். அர்ஷாத் அவர்களின் அனுசரணையில் கல்முனை இக்பால் சன சமூக நிலையத்தின் கேட்போர் கூடத்தில்ஞாயிற்றுக்கிழமை (20) மாலை இடம்பெற்றது. 

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் கலந்து கொண்டார் .

பிரதம அதிதியாக கலந்துகொண்ட நாடளும்ன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் அங்கு உரையாற்றுகையில்
கல்முனை பிராந்தியம் என்பது விளையாட்டு போட்டிகளுக்கு பிரசித்தி பெற்ற இடமாகும் தேசிய ரீதியில் திறமையை வெளிக்காட்டிய பல வீரர்களை உருவாக்கிய மண்ணாகும் இந்த மண்ணிலிருந்து இவ்வாறானதொரு விளையாட்டு கழகம் உருவாகியுள்ளது


இது எம் அனைவருக்கும் பெருமையே அதே போல இவ்வாறான விளையாட்டுக் கழகங்கள் மென்மேலும் எமது பிராந்தியத்தில் உருவாக வேண்டும் . விளையாட்டு மூலம் எமது திறமைகள் வெளிகோணர வாய்ப்பாக அமையும். இதற்காய் தான் முன்னின்று பல்வேறுபட்ட விளையாட்டு தொடர்பான செயற்திட்டங்கள் , விளையாட்டுப் போட்டிகள் போன்றவற்றை எதிர்காலத்தில் நடத்த தீர்மானித்துள்ளதாகவும் கல்முனை கடற்கரை மைதானத்தின் மைதான அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள
துரிதமாக நடைமுறைப் படுத்துவது தொடர்பிலும் தான் அதீத கரிசனை மேற்கொள்வதாகவும் இதேவேளை தனது பாராளுமன்ற நிதி ஒதுக்கீடுகள் மூலம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள விளையாட்டுக் கழகங்களுக்கு மென்மேலும் வளர்ச்சியடைய தான் ஒத்துழைப்பு வழங்க தயாராக இருக்கறேன் என்றார் .


மேலும் நிகழ்வில் அங்கமாக நடைபெற்று முடிந்த 2020 பாராளுமன்ற பொதுத்தேர்தலில் மீண்டும் அம்பாறை மாவட்டத்திலிருந்து வெற்றியீட்டி பாராளுமன்றத்திற்கு தெரிவான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித்தலைவர் . எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களுக்கு பால்கன் விளையாட்டுக் கழகத்தின் சார்பாக அதன் தலைவர் யூ.கே. லாபிர் பொருளாளர் முகம்மது நைசர் உட்பட நிருவாக குழு அங்கத்தவர்களால் பொன்னாடை போர்த்தி நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்

நிகழ்வின் இறுதி அம்சமாக பால்கன் அணியின் புதிய சீருடையை அறிமுகம் செய்யுமுகமாக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களுக்கு விளையாட்டுக் கழகத்தின் செயலாளர் எம்.எம். முகம்மது காமில் அவர்களால் வழங்கி வைக்கப்பட்ட அதேவேளை கலந்துகொண்ட கழகத்தின் வீரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டு புதிய சீருடை அறிமுகம் செய்துவைக்கபட்டது.


இதன் போது விசேட அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் பிரத்தியோக செயலாளர் நௌபர் ஏ .பாவா கலந்து சிறப்பித்ததுடன்அணியின் நிருவாக குழு உறுப்பினர்கள் மற்றும் கழக அங்கத்தவர்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts