உள்நாடு | சமூக வாழ்வு | 2020-09-14 23:14:57

சாய்ந்தமருதில் ஒரே இடத்தில் தொடர்ந்த மற்றுமொரு விபத்து

(ஹுதா உமர்)

கல்முனை பொலிஸ் பிரிவிற்க்குட்பட்ட சாய்ந்தமருதில் ரெட்சிலிக்கு அருகாமையில் இன்று மாலை கார் ஒன்றும் பயணிகள் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் யாருக்கும் எவ்வித காயங்களும் இல்லாது பாதுகாக்கப்பட்டிருந்தும் வாகனங்கள் கடும் சேதத்தை கண்டுள்ளது. உடனடியாக தளத்திற்கு விஜயம் செய்த கல்முனை பொலிஸார் போக்குவரத்தை சீர் செய்ததுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதே இடத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற விபத்தில் ஒருவர் மரணமடைந்ததுடன் மற்றுமொறுவர் இப்போதும் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Related Posts

Our Facebook

நாட்டின் புதிய தலைமைக்கு வாழ்த்துக்கள்

நாட்டின் மாண்புமிகு பிரதமர்

இளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்

Popular Posts