விளையாட்டு | விளையாட்டு | 2020-09-08 16:51:05

றிஸாட் வெற்றிக்கிண்ணத்தின் அரையிறுதிப் போட்டி ஒத்திவைப்பு 

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)  

மருதமுனை யுனிவர்ஸ் விiளாயட்டுக் கழகத்தின் அனுசரணையோடு அம்பாறை மாவட்ட உதைபந்தாட்டச் சங்கம் நடாத்திவந்த முன்னாள் அமைச்சர் றிஸாட் பதியுத்தீன் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி (06) மருதமுனை மசூர்மௌலான விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. போட்டிpயின் 17 நிமிடங்கள் மீதமிருக்க போட்டி ஒத்திவைக்கப்பட்டது.

இந்தப் போட்டியில் மருதமுனை எவரடி விளையாட்டுக் கழகமும் கல்முனை லக்கிஸ்டார் விளையாட்டுக் கழகமும் ஒன்றை ஒன்று எதிர்த்து விளையாடியது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், போட்டி ஆரம்பிக்கப்பட்டு முதல் பாதி வேளையில் எவரடி விளையாட்டுக் கழகம் 02 கோல்களை லக்கிஸ்டார் விளையாட்டுக் கழகத்துக்கு எதிராக போட்டு (02-00) என்ற கோல் வித்தியாசத்தில் போட்டி விறுவிறுப்பாக இடம்பெற்றது.
எனினும் போட்டியின் இடைவேளைக்கு பிறகு எவரடி விளையாட்டு கழகத்தினரால் அதிரடியாக விளையாட முடியாமல் போனது. லக்கிஸ்டார் கழகத்தின் முன்வரிசை வீரர்களின் அபார முயற்சியினால் அடுத்தடுத்து 02 கோல்கள் எவரடி அணிக்கு எதிராக போட போட்டி (02-02) என்ற கோல் சமநிலையோடு மேலும் விறுவிறுப்படைந்தது. யார்? இறுதிப் போட்டிக்கு தெரிவாவார்கள் என்ற ரசிகர்களின் பலத்த எதிர்பார்பு மைதானத்தில் காணப்பட்டது.

எனினும் போட்டி முடிவடைவதற்கு 17 நிமிடங்கள் மீதமிருக்கும் வேளையில் வானம் இருண்டு மழைபொழிய ஆரம்பித்தது. இதனால் போட்டியின் 17 நிமிடங்களும் பிறிதொரு தினத்தில் மீள நடாத்தப்பட்டு இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் கழகம் எது என தீர்மாணிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணி மறு முனையில் இறுதிப் போட்டிக்கு பல கழகங்களோடு விளையாடி தெரிவாகியுள்ள மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்துடன் விளையாடும்.
இறுதிப் போட்டி மிகவிரைவில் கோலாகலமாக நடாத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அம்பாறை மாவட்ட உதைபந்தாட்டச் சங்கத்தின் செயலாளர் எம்.ஐ.எம்.மனாப் தெரிவித்தார்

இரண்டாவது அரையிறுதிப் போட்டிக்கு nதிதிகளாக அமானா வங்கியின் உதவி முகாமையாளர் கே.எம்.நுசையில், நளீர் ஹாட்வெயார் இனாப் நளீர் ஆகியோர் கலந்து கொண்டனர். யுனிவர்ஸ் விiளாயட்டுக் கழகத்தின் தலைவர் கணக்காளர் றிஸ்வி யஹ்சர், செயலாளர் எம்.ஏ.முஹம்மட் றஜி, முகாமையாளர் எம்.றிஸ்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts