பிராந்தியம் | சமூக வாழ்வு | 2020-05-11 13:04:11

கல்முனை பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தராக எம்.என்.எம். றம்சான் நியமனம்

கல்முனை பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தராக மருதமுனையைச் சேர்ந்த முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் தரம்-1ச் சேர்ந்த எம்.என்.எம்.றம்சான் இன்று (2020/05/11) கல்முனை பிரதேச செயலாளர் அல்ஹாஜ்:எம்.எம்.நஸீர் அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் மருதமுனையின் முதல் பொலிஸ் உத்தியோகத்தரான மர்ஹூம், ஈ.எம் நஸுறுத்தின் அவர்களின் மூத்த புதல்வர் ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தனது முதல் நியமனத்தை வவுனியா மாவட்ட செயலகத்தில் 1992/03/24ஆம் திகதி பொது எழுது வினைஞராக கடமையேற்று ஒரு வருட காலம் கடமையாற்றிய நிலையில் 1993/04/12ஆம் திகதி சம்மாந்துறை பிரதேச செயலகத்துக்கு மாறுதல் பெற்று முகாமைத்துவ உதவியாளராக கடமையேற்று 08 வருடம் கடமையாற்றிய நிலையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு 2001/04/25ஆம் திகதி மாறுதல் பெற்று முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக இரண்டு வருடம் கடமையாற்றினார்.

இதன் பின்னர் 2003/07/08ஆம் திகதி சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக கடமையாற்றிய நிலையில் 2005/02/28ஆம் திகதி கல்முனை மேலதிக அதிபர் காரியாலயத்தில் சேவையாற்றி மீண்டும் 2007/07/15ஆம் திகதி சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் கடமையாற்றி நிலையில் 2010/08/18ஆம் திகதி தொடக்கம் 2010/12/09ஆம் திகதி வரை அம்பாறை மாவட்ட செயலகத்தில் கடமையாற்றினார்.

2010/12/10ஆம் திகதி சாய்ந்தமருது பிரதேச செயலகத்துக்கு மாறுதல் பெற்று 2015/01/15ஆம் திகதி வரை சேவையாற்றிய நிலையில் 2015/01/16ஆம் திகதி கல்முனை

பிரதேச செயலகத்தில் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தரராக கடமையாற்றிய நிலையில் இன்று 2020/05/11ஆம் திகதி நிர்வாக உத்தியோகத்தராக (பதில்) கடமையேற்றுள்ளார்.


Related Posts

Our Facebook

GENERAL ELECTION-2020 - DIGAMADULLA DISTRICT

GENERAL ELECTION-2020 -DIGAMADULLA DISTRICT

GENERAL ELECTION-2020

GENERAL ELECTION-2020

Popular Posts