கட்டுரைகள் | அரசியல் | 2020-09-05 06:55:34

சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் தெரிவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிசின் வகிபாகமும்

(சர்ஜுன் லாபிர்)

சம்மாந்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளராக தெரிவு செய்யபட்டிருக்கும் கெளரவ ஏ.எம்.எம்.நெளஸாத் அவர்களின் தவிசாளர் வகிபாகத்தில் கல்முனை தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.  ஹரீஸ் அவர்களின் பங்களிப்பு அதிகமானது என்பதை நம்மில் எத்தனை பேர் அறிவீர்கள் ?

கடந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில்  அகில இலங்கை மக்கள் காங்கிரசில் போட்டியிட்டு சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளராக இருந்த சகோதரர் நெளஸாத் நடந்து முடிந்த இப்பாராளுமன்ற தேர்தலில் மக்கள் காங்கிரஸ் தேர்தல் கேட்ட போதும் அவர்களுக்கு ஆதரவளிக்காது மாவட்டத்தை வெல்ல வேண்டும் என்ற தூய நோக்கத்திற்காக நடுநிலை வகித்தார். 

இவர் எடுத்த இந்த முடிவின் பின்புலத்தில் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹரீஸ் இருந்தமை நாம் அறிந்த விடையம் என்பதோடு அதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் சம்மாந்துறையில் இறுதியாக நடந்த பொதுக்கூட்டத்தில் வைத்து சகோதரர் நெளஸாத் முதலமைச்சர் ஆசைக்காக ஹரீசுடன் இணைந்து எமது கட்சிக்கும் துரோகம் செய்ததாக கூறினார்.

அதனைத் தொடர்ந்து சகோதரர் நெளஸாத் அகில இலங்கை மக்கள்  காங்கிரஸின் சகல பதவியிலிருந்தும் நீக்கப்பட்டதுடன் தனது  தவிசாளர் பதவியிலிருந்தும் விலகினார். 

இவை அனைத்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அவர்களின் செயற்பாட்டால்தான் நிகழ்ந்தது என்பதை உணர்ந்த ஹரீஸ் இன்று தனது திராணியுடன் கூடிய அரசியல் தந்திரோபாயத்தால் மீண்டும் நெளஸாத்தை தவிசாளராக்கியுள்ளார்.

தவிசாளர் தெரிவுக்கு முதல்நாள் தலைவரின் சம்மாந்துறை வருகையினை வைத்து எமது கட்சியின் போராளிகள் இதை தலைவர் தான் செய்தார் என்று சொல்லி வருகின்றனர் ஆனால் இதை தனியாக நின்று தலைவர் மட்டும் செய்யவில்லை தலைவரும் சேர்ந்துதான் செய்தார் என்பதோடு தனிமனிதனாக ஹரிஷ் செய்த முயற்சியும் இதில் கணதியானது.

கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த மன்சூரால் தனது கட்டுப்பாட்டில் இருந்த சம்மாந்துறை பிரதேச சபையை வெல்ல முடிந்ததா ?

அதேபோல் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிமால் தனது கட்டுப்பாட்டில் இருந்த நிந்தவூர் பிரதேச சபையை வெல்ல முடிந்ததா ?

இவர்கள் இருவரும் செய்யாததை கல்முனை மாநகர சபையில் சாய்ந்தமருது என்ற ஓர் அலகு பிரித்து நின்று எதிர்த்த நிலையில் பல சவால்களுக்கு மத்தியில் கல்முனை மாநகர சபையினை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியது இது பாராளுமன்ற உறுப்பினர் ஹரிசின் தனிமுயற்சியாகும்.

ஹரீஸ் அவர்களின் அரசியல் நகர்வு தனிப்பட்ட சுயலாபம் இன்றி சமூகம் நோக்குடையது எனவே கட்சியில் வியூகம் அமைப்பதில் பிரதி தலைவர் என்ற அடிப்படையில் ஹரிசின் பங்கும் இருக்க வேண்டும் என்பதை உணர்துகின்றேன்

மேலும் கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வில் தலைமை சில சறுக்கல்களை சந்தித்துண்டு ஆனால் தலைவர் வியூகம் அமைக்கத் தெரியாதவர் என்று சொல்லவில்லை ஆனால் கட்சியின் ஏனைய உறுப்பினர்களிடமும் கலந்துரையாடி தீர்மானங்களை மேற்கொள்ளும் தலைமையாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றேன்.

இலை மறை காயாக இருந்து அம்பாறை மாவட்டத்தின் அரசியலை தனது தந்துரோபாய உக்திகளால் வெற்றிகரமாக நகர்த்திவரும் எமது பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஷ் தேசிய அரசியலிலும் தலைமையுடன் இருந்து செயற்பட வாழ்த்துகள்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts