பிராந்தியம் | அபிவிருத்தி | 2020-08-25 08:14:46

சம்மாந்துறை நகரை நவீன மின் விளக்குகளினால் அழகுபடுத்தும் வேலைத்திட்டம்

(எம்.எம்.ஜபீர்)

சம்மாந்துறை நகரினை மின் ஒளியினால் அழகுபடுத்தும் நோக்குடன் சம்மாந்துறை பிரதேச சபையினால் பிரதான விதிகளில் நவீன மின் விளக்குகளை பொருத்தும் வேலைத்திட்டம் சம்மாந்துறை பிரதேச சபையின் பதில் தவிசாளர் ஏ.அச்சி முஹம்மட் தலைமையில் இன்று (24) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதில் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்களான வீ.ஜெயச்சந்திரன், ஐ.எல்.நஜீம், ஆர்.வளர்மதி, ஏ.சி.எம்.சஹீல், எம்.ரீ.பௌசுள்ளாஹ், ஏ.எம்.எம்.றியாஸ், ஏ.எல்.எம்.ஜிப்ரி, எம்.எஸ்.சரீபா, எஸ்.எம்.சித்தி நிலுவ்பா, கே.எல்.சிஹாமா, வை.பீ.எம்.முஸம்மில், சம்மாந்துறை பிரதேச சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இத்திட்டம் சம்மாந்துறை பிரதேச சபையின் 04ஆவது சபையின் 30ஆவது கூட்டத் தீர்மானத்திற்கமைவாக நகரின் பிரதான பாதைகளிலுள்ள சோடியம் மற்றும் சீ.எப்.எல் மின் விளக்குகளை அகற்றி, அவற்றிக்குப் பதிலாக நகரை நவீன மின் ஒளியினால் அழகுபடுத்தும் நோக்குடன் எல்.ஈ.டீ மின் விளக்கு பொருத்தும் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்மை குறிப்பிடத்தக்கது.


Related Posts

Our Facebook

நாட்டின் புதிய தலைமைக்கு வாழ்த்துக்கள்

நாட்டின் மாண்புமிகு பிரதமர்

இளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்

AD-01

Popular Posts