கட்டுரைகள் | இஸ்லாம் | 2020-05-02 03:57:36

நோன்பை முறிக்கும் செயல்களும் அனுமதிகளும்

1. சாப்பிடுதல், குடித்தல் போன்றவற்றால் (அவைகள் உடலுக்கு பயன்தராத புகைபிடித்தல் போன்றவையாக இருந்தாலும் சரியே) நோன்பு முறிந்து விடும்.

2. முத்தமிடுதல், அணைத்தல், சுய இன்பம் போன்றவற்றால் இந்திரியம் வெளியானால் நோன்பு முறிந்து விடும், தூக்கத்தில் தானாகவே இந்திரியம் வெளியானால் நோன்பு முறியாது.

3. வேண்டுமென்று வாந்தி எடுத்தால் நோன்பு முறிந்து விடும். தானாகவே வாந்தி வந்தால் நோன்பு முறியாது.

4. உணவைப் போன்று சக்தியூட்டக்கூடிய பொருட்களை (மருந்து, குளுக்கோஸ் போன்றவைகளை) ஊசி போன்றவற்றின் மூலம் உடம்புக்கு செலுத்தினாலும் நோன்பு முறிந்து விடும்.

5. மாதவிடாய் மற்றும் பிரசவ இரத்தம் வந்துவிட்டால் நோன்பு முறிந்து விடும்.

நோன்பின் அனுமதிகள்

1. நோன்பின்போது காயங்களுக்கு மருந்து போடுதல், பல் பிடுங்குதல், கண், காதுகளுக்கு சொட்டு மருந்திடுதல் போன்வற்றிற்கு அனுமதியுள்ளது.

2. காயங்கள், சிறுமூக்கு உடைதல், பல்பிடுங்குதல் போன்றவற்றால் இரத்தம் வெளியானால் நோன்பு முறியாது.

3. நோன்பு நாட்களின் பகல்பொழுதில் பல் துலக்குவது தவறில்லை. மாறாக அது நோன்பல்லாத நாட்களில் சுன்னத்தாக இருப்பது போன்றே நோன்பு நாட்களிலும் சுன்னத்தாகும்.

4. குளிப்பு கடமையான நிலையில் ஸஹர் செய்வதில் தவறில்லை. அதற்கு அடுத்து வரும் சுப்ஹு தொழுகைக்காக குளித்துக் கொண்டாலே போதுமானது.

5. கடும் வெயிலின் காரணமாக குளிர்ந்த நீரை உடலில் ஊற்றிக்கொள்வதோ, குளிர் சாதனங்களை உடல்மீது பயன்படுத்துவதிலோ, பகல் மற்றும் மாலைபொழுதில் குளித்துக் கொள்வதிலோ தவறில்லை.

6. நோன்பு திறக்க எதுவும் கிடைக்காவிட்டால் நோன்பு திறக்கும் நேரத்தில், நோன்பு திறப்பதாக எண்ணிக்கொண்டு பிறகு வாய்ப்புக் கிடைக்கும் போது சாப்பிட்டு கொண்டால் போதுமானது.

7. வாய் கொப்பளிக்கும் போது தன்னை அறியாது தண்ணீர் தொண்டையில் இறங்கிவிட்டால் நோன்பு முறியாது. ஆனால் அடித்தொண்டைவரை தண்ணீரை செலுத்தாமல் இருக்க வேண்டும்.

8. நேரம் தெரியாமல் சூரியன் மறைந்து விட்டது என்று நினைத்து, சூரியன் மறைவதற்கு முன்னரோ, அல்லது ஃபஜ்ர் நேரம் வரவில்லை என்று நினைத்து, ஃபஜ்ர் நேரம் வந்ததற்கு பிறகு சாப்பிட்டு விட்டாலோ நோன்பு முறியாது. எனினும் சரியான நேரம் தெரிந்து விட்டால் உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும்.

9. மறந்து அல்லது தெரியாமல் சாப்பிட்டோ, குடித்தோ விட்டால் நோன்பு முறியாது. ஆனால் நோன்பின் நினைவு வந்தவுடனே நிறுத்திகொள்ள வேண்டும்.

அல்லாஹ் மிக அறிந்தவன்.

இப்பதிவானது மருதமுனை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் M.I. ஹுசைனுதீன் (ரியாழி) அவர்களின் முகப்புத்தகத்தில் இருந்து பெறப்பட்டதாகும்.


Related Posts

Our Facebook

GENERAL ELECTION-2020 - DIGAMADULLA DISTRICT

GENERAL ELECTION-2020 -DIGAMADULLA DISTRICT

GENERAL ELECTION-2020

Popular Posts