பிராந்தியம் | அரசியல் | 2020-08-08 17:22:18

மருதமுனையில் வெற்றி நாயகர்களின் நன்றி தெரிவிப்புக்கான மக்கள் சந்திப்பு..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

நடந்து முடிந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு அமோகமாக வாக்களித்த மருதமுனை மக்களுக்கு நேரடியாக நன்றி தெரிவிப்பதற்காக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள விசேட மக்கள் சந்திப்பு நாளை மறுதினம் திங்கட்கிழமை (10-08-2020) மாலை 7.00 மணியளவில் மருதமுனை பொது நூலக கேட்போர் கூடத்தில் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம் றகீப் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில், திகாமடுல்ல மாவட்டத்தில் அமோக வாக்குகளுடன் வெற்றியீட்டி, மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசிம் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இதில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக்குழு அன்புடன் அழைப்பு விடுக்கின்றது.


Related Posts

Our Facebook

நாட்டின் புதிய தலைமைக்கு வாழ்த்துக்கள்

நாட்டின் மாண்புமிகு பிரதமர்

இளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்

AD-01

Popular Posts