கலை இலக்கியம் | சமூக வாழ்வு | 2020-04-23 14:55:13

நீ தயாரா....??

(மருதமுனை நிஸா)

நான் வரும் வரை இருக்காதே
இப்பவே தயாராகு
அதற்காக பட்டாசை
கொழுத்தி எனை
அசிங்கப் படுத்தாதே

வீடு வாசலை சுத்தம்
செய்வதோடு
நீயும் சுத்தமாக இரு
ஒட்டறைகளை அடிப்பதோடு
அகத்தொட்டறைகளையும்
நன்றாய் துடைத்திடு
நீரூற்றி தின்னையை
நன்றாக கழுவுவதோடு
உன்னையும் அழுக்கு குணங்களில்
இருந்து துப்பரவாக்கு

உணவு பண்டங்களை
வாங்கி சேமிக்காதே
ஏனென்றால் ஏழையின்
நிலையையும் கொஞ்சம்
நிமிர்ந்து பார்
நான் உன் வீட்டுக்கு
சாப்பிட வரவில்லை
உனக்கு நல்ல வழியை
காட்டித்தரவே வருகிறேன்

ஒவ்வொரு முறையும்
நான் வந்துதான் உன்னை
தொழச்செய்கிறேன்
என்னை கண்டால்தான்
தொழுகிறாய்
நான் மறைந்ததும்
விட்டுவிடுகிறாய்
அப்படி இம்முறையும்
இருந்திடாதே
நான் வருமுன்னே
தொழுது கொள்

மனதால் சோர்வாகி
கவலைகளால் சூழப்பட்டு
அச்சத்தால் உச்சநிலையடைந்து
பொருளாதாரத்தால்
நெருக்கப்பட்டு நொருங்கிப்போய்
இருக்கிறாய் என்பதை
அறிந்தே வருகிறேன்
நான் வருகிறேன்
கவலைப்படாதே

நான் வந்து உன்னோடு
முப்பது நாள் மட்டுமே
தங்குவேன் அப்போதே
உனக்கு தேவையான
அனைத்தையும் கேட்பதோடு
நீ செய்த பாவங்களை
மன்னிக்க கோரி மன்றாடு
இறைவனிடம்
என்னை நீ உதாசீனம் செய்தால்
அதன் விளைவையும்
நீ காண்பாய் மறுமையில்
நான் வரும் நாளும் நேரமும்
நெருங்கிவிட்டது
பள்ளியில் தகவல்
சொல்லிவிட்டுத்தான் வருவேன்
நீ தயாரா???


Our Facebook

GENERAL ELECTION-2020 - DIGAMADULLA DISTRICT

GENERAL ELECTION-2020 -DIGAMADULLA DISTRICT

GENERAL ELECTION-2020

Popular Posts