உள்நாடு | அரசியல் | 2020-07-30 18:28:59

கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையான அரசியல் கோசங்கள்.

(எம்.ஐ.சர்ஜுன்)

மாபெரும் தலைவரான மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபிற்கு பின்னரான முஸ்லிம்
காங்கிரஸின் அரசியல் நகர்வுகள் வெறுமெனே வாக்காளர்களை உனர்ச்சியூட்டி வாக்கு
கொள்ளையினை ஈட்டும் தந்திரோபாய அரசியலை காலாகாலமாக நமது பிரதேசங்களில்
செய்துவருவதனை நடுநிலையாக சிந்திக்கின்ற எவரும் உணர முடியும். அந்த வகையில்
தென்கிழக்கு அலகு, கரையோர மாவட்டம், சமுதாய இருப்பு, தேசியம், அபிவிருத்தி,
உரிமைகள் என தேர்தலை வெல்லும்வரை வாக்காளரை மூலைச்சலவை செய்யும் முஸ்லிம்
காங்கிரஸ் தேர்தல் வாக்கு கொள்ளையர்கள் இம்முறை கையிலெடுத்துள்ள ஆயுதம்
'மாவட்டத்தை வெல்வோம் முஸ்லிம் மாவட்டத்தை மீட்போம்' என்பதாகும்.

வேடிக்கை என்னவென்றால் முஸ்லிம் காங்கிரஸ் உண்மையில் தனித்து மரச் சிண்னத்தில்
போட்டியிட்டு இவ்வாறு கூறியிருந்தால் இக்கூற்றை நடுநிலையாளர்கள் சவாலுக்கு
உட்படுத்தியிருக்க மாட்டார்கள். டெலிபோன் சின்னத்தில் முதன்மை வேட்பாளராக
சிங்கள மூத்த அரசியல்வாதியான சந்திரதாச கலப்பதியினை கொண்டு அதில் போட்டியிடும்
முஸ்லிம் காங்கிரஸ் தரப்பு முஸ்லிம் மாவட்டத்தை வெல்லப் போவதாக கூறுவது
கேலிக்கூத்தான அரசியல் சித்து விளையாட்டு ஆகும்.

கடந்த காலங்களில் தயா கமகேவினை விஞ்சி ஒரு அடியேனும் நகர முடியவில்லை என
பகிரங்கமாக கூறிய முன்னாள் இராஜாங்கம் ஹரீஸ் அவர்கள் அம்பாறையில் தயா கமகேயை
விட மூத்த அரசியல் அனுபவம் கொண்ட கலப்பதியினை விஞ்சி எத்தனை அடி முன்னோக்கி
செல்ல எத்தனித்துள்ளார் என்பதனை மக்கள் மன்றில் கூற வேண்டும்.

ஐக்கிய தேசிய கட்சியின் கடந்த அரசில் ஆளும் தரப்பில் அம்பாறை மாவட்டத்தில் 4
முஸ்லிம் காங்கிரஸ் சார்பான பாராளுமன்ற உறுப்பினர்களும் ஐக்கிய தேசிய
கட்சியின் 1 பாராளுமன்ற உறுப்பினருமாக ஐந்து பேர் இருந்த முஸ்லிம் காங்கிரஸ்
பாராளுமன்ற பிரதிநிதிகளால் கொள்கையளவில், உரிமைசார் விடயங்களில்,
அபிவிருத்தியில் எவ்வளவு தூரம் கடந்த அரசின் பங்காளிகளாக இருந்து பயணிக்க
முடிந்தது. மாறாக பயக்கெடுதியில் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களுக்கு
செல்வதைக் கூட பெரும்பாலும் தவிர்த்து வந்த பிரதிநிதிகளே அதிகம். இவர்கள்
தற்போது மாவட்டம் வெல்ல எத்தனிப்பது மக்களை மடையர்கள் என நினைத்தா என என்னத்
தோன்றுகிறது.

நமது மாவட்டத்தை யதார்த்தமாக நாம் வெல்லுவதற்கும் நாமே நீதமாக ஆளுவதற்கு
முஸ்லிம் மாற்று சக்திகளை பலப்படுத்துவதே காலத்தின் கட்டாய தேவையாகும். இது
கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல பெரும் தலைவர் கண்ட தென்கிழக்கு அலகு
அல்லது கரையோர மாவட்டம் எனும் கோஷம் எல்லாவற்றையும் மறந்த முஸ்லிம் காங்கிரஸ்
தரப்பு உப்புச் சப்பில்லாத கொள்கையற்ற கோசங்களை விதைப்பது சீசன் அரசியல்
வியாபாரமே தவிர வேறில்லை.

முற்று முழுதுதாக மாவட்டம் கையிலிருந்தபோது எந்தவிதமான அபிவிருத்தியையோ
உரிமையையோ துளியளவேனும் பெற்றுக் கொடுக்காமைக்கு இன்றுவரை காணப்படுகின்ற
கல்முனையின் அபிவிருத்தியில் உள்ள அவல நிலை மற்றும் அம்பாரை பள்ளி உடைப்பு,
மாயக்கல்லி சிலை வைப்பு போன்ற பல தீர்க்கப்படாத பிரச்சினைகளை கூறலாம்.
அவ்வாறான பிற்போக்கு அரசியலை பெரும்பான்மை பலத்தினையும் அமைச்சுக்களையும்
வைத்துக் கொண்டிருந்தவர்கள் மாவட்டம் வெல்ல வேண்டும் என தற்போது நீலிக்கண்னீர்
வடிக்கின்றனர்.  


Related Posts

Our Facebook

நாட்டின் புதிய தலைமைக்கு வாழ்த்துக்கள்

நாட்டின் மாண்புமிகு பிரதமர்

இளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்

Popular Posts