உள்நாடு | சமூக வாழ்வு | 2020-04-15 23:33:45

TM நியூஸ் ஊடக வலையமைப்பின் ஊடக அனுசரணையோடு மாஸ்க் முககவசங்கள் இலவசமாக விநியோகிக்கப்பட்டன.

TM நியூஸ் ஊடக வலையமைப்பின் ஊடக அனுசரணையோடு படையினர் மற்றும் பொதுமக்களுக்கு மாஸ்க் முக கவசங்களை இலவசமாக விநியோகிக்கும் நிகழ்வு (13) கல்முனை நகரில் நடைபெற்றது

முப்படையினர் மற்றும் பொதுமக்களுக்கு 10,000 மாஸ்க் முக கவசங்களை இலவசமாக வழங்கும் திட்டத்தின் கீழ் இந்த மாஸ்க் முகக் கவசங்கள் வழங்கி வைக்கப்பட்டன. 

குறித்த மாஸ்க்முக கவசங்களை கல்முனை மாநகர சபை உறுப்பினர் ரி.எம் முபாரிஸ்  அவர்கள் ரி.எம் நியூஸ் ஊடக நிறுவனத்திற்கு  அன்பளிப்பு செய்யப்பட்டதை அடுத்து மாஸ்க் முகவசங்கள் இலவசமாக வினியோகிக்கப்பட்டன.

கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்த அவர்களிடத்தில் ஒரு தொகுதி மாஸ்க் கையளிக்கப்பட்டன. அதேபோன்று கல்முனை ராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் பொலிஸ் பிரிவுகளில் பணியாற்றுகின்ற உத்தியோகத்தர்களுக்கும் வழங்கிவைக்கப்பட்டது.
இதேநேரம் வீதிகளில் முகக் கவசம் அணியாமல் சென்ற பொது மக்களுக்கும் மாநகரசபை உறுப்பினர் மற்றும் TM நியூஸ் குழும்மத்தினர்  இலவசமாக மாஸ் கவசங்களை வழங்கி வைத்தனர்

TM நியூஸ் குழுமத்தின் முன்மாதிரியான இந்த செயற்பாட்டை சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டி பேசினார்கள்


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts