பிராந்தியம் | சமூக வாழ்வு | 2020-04-15 21:27:52

மருதமுனை: உதவும் கரங்கள் அமைப்பின் ஏற்பாட்டில் மருதமுனை பொது இடங்களில் தொற்றுநீக்கல் வேலைத்திட்டம்

சாய்ந்தமருது உதவும் கரங்கள் நலன்புரி அமைப்பின் (Helping Hands Welfare Organization) ஏற்பாட்டில் கல்முனை பிராந்தியத்தில் காணப்படும் பொது இடங்களை தொற்றுநீக்கும் வேலைத்திட்டம் கடந்த இரு வாரங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் அடிப்படையில், மருதமுனையில் முதற்கட்டமாக பொதுச்சந்தை, மஸ்ஜிதுல் கபீர் சுற்றிடம் மற்றும் இஸ்லாமிக் ரிலீப் வீட்டுத்திட்டம் ஆகிய இடங்களை தொற்றுநீக்கும் செயற்பாடு இன்று (15/04/2020) காலை இடம்பெற்றது.

இன் நிகழ்வில் சாய்ந்தமருது உதவும் கரங்கள் நலன்புரி அமைப்பின் தலைவர் ST. யாசிர், செயலாளர் KM. சஜ்ஜாத் உட்பட அனைத்து உறுப்பினர்களும் பங்குபற்றியிருந்தனர்.

இவ் வேலைத்திட்டத்தினை அர்ப்பணிப்புடன் இவ் அமைப்பினர் முன்னெடுத்து வருவதனைத் தொடர்ந்து இச் சேவையினை ஊக்குவிக்கும் வண்ணம் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் KM. அப்துல் ரசாக் (ஜவாத்) அவர்களும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் MIM. மனாப், கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் YK. ரஹ்மான் ஆகியோரும் சகோதரர் கலீல் முஸ்தபா, சகோதரர் BM. ஷிபான் ஆகியோரும் தமது கட்சி ரீதியான பங்குபற்றுதலினை வழங்கியிருந்தனர்.

இன் நிகழ்வின்போது பொதுமக்கள் அதிகம் தொடுகைக்குட்படுத்தக்கூடிய பொருட்கள், சுவர்கள், விற்பனை தானங்கள் மற்றும் சுற்று மதில்கள் என்பன உதவும் கரங்கள் சகோதரர்களினால் தொற்றுநீக்கிகள் விசிறுவதன் மூலம் தொற்றுநீக்கம் செய்யப்பட்டன.

இவ் வேலைத்திட்டத்தின் மருதமுனைக்கான அடுத்தகட்டப்பணி இன்னும் ஓரிரு நாட்களில் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts