ஆரோக்கியம் | சமூக வாழ்வு | 2020-03-24 17:18:08

கல்முனை மாநகர சபையின் கொரோனா வைரஸ் தகவல் மத்திய நிலையத்தின் அவசர நடவடிக்கையினால் காப்பாற்றப்பட்ட உயிர்

இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கின்ற நிலையில் கல்முனை நகர மண்டப வீதியை சேர்ந்த ஒருவர் திடீரென நோய்வாய்ப்பட்டு, மயக்கமுற்றுள்ளார். இதையடுத்து அவரது மனைவி, பிள்ளைகள் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்காக போக்குவரத்து வசதியின்றி நிர்க்கதியான ஒரு நிலைக்குள் தள்ளப்பட்டிருந்தனர். அக்குடும்பத்தினருக்கு உதவ எவரும் வரவில்லை.

இதையடுத்து மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார் மற்றும் மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் அர்ஷாத் காரியப்பர் ஆகியோர் துரிதமாக செயற்பட்டு, கல்முனை பொலிஸ் நிலையத்தில் இருந்து அவசர அம்பியூலன்ஸ் வண்டியைப் பெற்று, குறித்த நோயாளியின் ஸ்தலத்திற்கு சென்று, மாநகர சபையின் தீயணைப்பு படையினரின் உதவியுடன் அங்கிருந்து, அந்நோயாளி அந்த அம்பியூலன்ஸ் மூலம் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts