பிராந்தியம் | அரசியல் | 2020-03-10 18:51:31

தேர்தல் காலங்களில் வேட்பாளர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து வருகின்றது

(பாறுக் ஷிஹான்)

தேர்தல் காலங்களில் வேட்பாளர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து செய்து வருவதனை காலா காலமாக செய்து வருகின்றது என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கல்முனையில் திங்கட்கிழமை(9) மதியம் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில்



தமிழீழ விடுதலைப் புலிகள் அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கதினராகிய எங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரவு வழங்க கூறினார்கள் அதன் நிமிர்த்தமே ஆதரவு வழங்கினோம் விடுதலை புலிகள் வேண்டுகோள் விடுத்ததனை மதித்து மூன்று தசாப்த காலமாக ஆதரவு வழங்கி வந்ததனை மீள் பரிசீலனை செய்யவேண்டிய நிலை வரும் பாராளுமன்ற தேர்தலில் ஏற்பட்டுள்ளது.


தேர்தல் காலங்களில் வேட்பாளர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து செய்து வருவதனை காலா காலமாக செய்து வருகின்றது இது அடிமட்டத்திலிருந்து கட்சிக்காக போராடி வருகின்ற தொண்டர்களை ஒதுக்கி வைத்து விட்டு வடகிழக்கு மாகாணத்தில் எவ்வாறான பிரச்சினைகள்இ வலிகள் உள்ள என்பதை அறியாதவர்கள் எக்காலத்திலும் செய்யப்போவதில்லை.


எமது வட கிழக்கு மாகாணங்களில் உள்ள உழைக்கும் வர்கத்தினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மதிப்பதில்லை தேர்தல் காலங்களில் மாத்திரம் எம்மை அணுகி வாக்குகளை பெற்றுக்கொண்டு தேர்தல் நிறைவு பெற்ற பின்னர் தொலைபேசி அழைப்புக்களை கூட எடுப்பதில்லை.

மக்கள் பற்றிய சிந்தனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமைகள் ஒருபோதும் இருந்ததில்லை. விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நாங்கள் நேசித்தமையால் தான் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவினை வழங்கியிருந்தோம் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் அனைவரும் தமிழ் மக்களைப் பற்றி சிந்திப்பதே இல்லை ஆனால் வெறுமனே தேசியம் பேசிக்கொண்டு இருக்கின்றனர்.

30 வருடகால கொடூரத்தில் மக்கள் பட்ட அவலங்கள் இன்னல்கள் பற்றி அவர்கள் ஒருபோதும் கருத்தில் எடுப்பதில்லை வடகிழக்கில் பட்டம் முடித்தவர்கள் இன்று 45 வயது களைத்த தாண்டியும் தொழில் இல்லாமல் அல்லல்படுகின்றனர்.

வடகிழக்கில் உள்ள சிறுபான்மை கட்சிகளில் தலைவர்களிடம் நம்ம நாங்கள் பல்வேறுபட்ட பேச்சுவார்த்தைகள நடத்தி வருகின்றோம்
குறிப்பாக அன்மையில் ஈபிடிபியின் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து பட்டதாரிகள் விடயம் குறித்து அவர்களின் வேலை வாய்ப்பு குறித்தும் பேசியிருந்தோம் அவர் கூட இந்த தேர்தல் காலத்தில் அவரிடம் உதவி கேட்டு சென்றவளே அரசியல் பேசாமல் இந்த மக்களின் இந்த மாணவர்களின் வேலைவாய்ப்பு குறித்து பேசிய மனசுக்கு சந்தோஷமாக இருந்தது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் அடிமட்ட தொண்டர்களை மேல் மட்டத்துக்கு கொண்டு வருவதை கொண்டுவருவதற்கு விரும்பவில்லை. இந்த முப்பது வருட காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு தலைமைத்துவ ஆளுமையுள்ள ஒருவரை உருவாக்கவில்லை இதனை நான் பகிரங்கமாகக் கூறிக் கொள்வேன். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தங்களது வேட்பாளர்களை காலத்திற்கு காலம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்கின்றனர். இங்கே மாவட்டத்தில் மாவட்டந்தோறும் கட்சிக்காக கட்டப்பட்டவை கட்சியை வளர்த்தவர் மக்களுக்காக குரல் கொடுத்தவர்கள் அவ்வாறு இருக்கின்றன அவர்களை மறைத்துவிட்டு அவர்களுக்கு இடம் கொடுக்காமல் வெளிநாட்டு இறக்குமதி அவர்கள் விரும்புகின்றனர். கட்சியோடு தொடர்பு இல்லாத ஒருவரை ஒருவரை வேட்பாளராக போடுவது பிழையான விடயம்.

கட்சிகளுக்கு என்று ஒரு வரைமுறை உள்ளது கொழும்பில் இருக்கும் ஒருவரை வட கிழக்கு மாகாணங்களில் வேட்பாளராக நிறுத்துவது அவர்களுக்கு மாவட்டத்திலுள்ள அடிப்படை பிரச்சினை கூட தெரியவில்லை. இதனைத்தான் அன்மையில் கட்சிக்காக பாடுபட்ட மகளிர் அமைப்பினர் அவர்கள் தங்களது வேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர் . பாடு பட்டவர்களுக்கு உடல்நிலை கொடுக்க வேண்டும் என்பது எமது நிலைப்பாடு வெளிநாட்டு இறக்குமதி வேட்பாளர்களை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் ஆகிய நாங்கள் இந்த அரசினை ஆதரித்து குறிப்பாக மக்கள் பிரச்சினை தொழிற்சங்க பிரச்சினை வைத்தியசாலை பிரச்சினை பட்டதாரிகள் பிரச்சனை குறித்த விடயங்களில் எமது சாதக நிலையை ஏற்படுத்த வேண்டுமெனில் கோத்தபாய ஜனாதிபதி தலைமையிலான அரசை ஆதரிக்க வேண்டிய நிலையும் தற்போது காணப்பட்டு வருகின்றது என குறிப்பிட்டார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts