உள்நாடு | சமூக வாழ்வு | 2020-03-09 23:47:29

மருதமுனையைச் சேர்ந்த ஜனாபா றாஹிலா உம்மா மூஸா மாவட்ட இரும்புப் பெண்கள் விருது வழங்கி கௌரவிப்பு.

(பி.எம்.எம்.ஏ.காதர்)

சர்வதேச மகளிர் தினத்தை;யொட்டி மருதமுனையைச் சேர்ந்த ஜனாபா றாஹிலா உம்மா மூஸா மாவட்ட இரும்புப் பெண்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

அம்பாறை பொலிஸ் தலைமையகமும் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவுக்கான தலைமைக் காரியாலயமும் இணைந்து ஏற்பாடு செய்த சர்வதேச மகளிர் தின நிகழ்வு அம்பாறை பொலிஸ் தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை(08-03-2020)நடைபெற்றது.இதன்போதே இவர் கௌரவிக்கப்பட்டார்.

ஜனாபா றாஹிலா உம்மா மூஸா தனது ஏழு பிள்ளைகளையும் பட்டதாரிகளாக உருவாக்கியதுடன் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட தனது மகன் ஒருவருக்கு தனது சிறுநீரகத்தை தானம் செய்துள்ளார்.அத்துடன் ஆசிரியரும்,எழுத்தாளருமான தனது கணவரான மர்ஹ_ம் எஸ்.எம்.மூஸாவின் முன்னேற்றத்தில் பெரும் பங்காற்றியுள்ளார்.இதனாலேயே இவர் இந்த விருதுக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை பொலிஸ் நிலைய பிரதம பொலிஸ் பரிசோதகர் தயானி கமகே தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த ரட்நாயக்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இங்கு ஒரு முஸ்லிம்,ஒரு தமிழ் உட்பட ஆறு சிங்களப் பெண்களும் கௌரவிக்கப்பட்டனர். மாவட்ட மகளிர் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத் தடுப்பு பிரிவுக்கான பிரதம பொலிஸ் பரிசோதகர் சொர்ண காந்தி உள்ளிட்ட மாவட்ட நிருவாக அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts