விளையாட்டு | விளையாட்டு | 2020-03-08 19:40:15

மருதமுனையில் கிறீன் மெக்ஸ் மின்னொளி உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் அனுசரணையோடு மருதமுனை கிறீன் மெக்ஸ் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த மின்னொளி உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும் அண்மையில் மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

மருதமுனை ஒலிம்பிக், கிறீன் மெக்ஸ், ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி, கல்முனை சனிமவுண்ட், ஆகிய அணிகல் விளையாடிய இந்த சுற்றுப் போட்டியில்  மருதமுனை கிறீன் மெக்ஸ், கல்முனை சனிமவுண்ட் அணிகளுக்கிடையில் நடைபெற்ற முதல் போட்டியில் (01-00) என்ற கோல் வித்தியாசத்தில் கல்முனை கனிமவுண்ட் விளையாட்டுக்களகம் வெற்றி பெற்றது.

இரண்டாவதாகவும் இறுதிப் போட்டியாகவும் நடைபெற்ற ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி அணிக்கும் மருதமுனை ஒலிம்பிக் அணிக்கும் இடையிலான போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி அணி (02: 01) என்ற கோல் வித்தியாசல்தில் சம்பியன் கிண்ணத்தை வெற்றி கொண்டது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியை கண்டுகளிப்பதற்காக பெரும்திரளான பொதுமக்கள் மைதானத்திற்கு வருகை தந்திருந்தனர்.

வெற்றி பெற்ற அணிகளுக்குரிய வெற்றி கிண்ணங்களை பிரதம அதிதியாக கலந்து கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் வழங்கிவைத்தார்.

பரிசளிப்பு நிகழ்வில் கல்முனை மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப், மானகரசபை உறுப்பினர்களான ஏ.ஆர்.அமீர்,எம்.எஸ்.ஹாரிஸ் நவாஸ்,றோசான் அக்தர் மற்றும் கிறீன் மெக்ஸ் விழையாட்டு கழகத்தின் தலைவரும் மாநகர சபை உறுப்பினருமான எம்.எஸ்.உமர் அலி ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் நிருவாக ரீதியாக பாவி உயர்வு பெற்ற உத்தியோகத்தர்களின் சேவையை பாராட்டி பொன்னாடை போத்தி கௌரவிக்கப்பட்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts