விளையாட்டு | விளையாட்டு | 2020-03-07 23:03:04

மருதமுனை அல்-மனார் கல்லூரியின் இல்ல விளையாட்டு விழா – சபயர் இல்லம் சம்பியனாக தெரிவு 

(ஏ.எல்.எம்.ஷினாஸ், எம்.ஜெ.மின்ஹாஜ்)

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட நூற்றாண்டை கடந்து நிற்கின்ற மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு விழாவின் இறுதிநாள் நிகழ்வும், பரிசளிப்பும் (06-03-2020) மாலை 2.30 மணிக்கு கல்லூரி மைதானத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

அல்-மனார் மத்திய கல்லூரியின் அதிபர் எம்.ஜே.அப்துல் ஹஸீப் தலைமையில் நடைபெற்ற இந்த விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் கலந்து சிறப்பித்தார்.
சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் டாக்டர் எஸ்.எம்.எம்.எஸ். உமர் மௌலானாவும் விஷேட அதிதியாக கோட்டக்கல்வி அதிகாரி பி.எம்.எம்.பதுறுத்தீன், சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர்களான டாக்டர். சித்தீக் ஜெமீல்ஸ், டாக்டர் ஏ.டபிளியு.எம்.சமீம் ஆகியோரும் கலந்து சிறப்பித்தார்கள்.
08 வருடங்களின் பின் நடைபெற்ற இந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் றூபி (சிவப்பு), எமரோல்ட் (பச்சை), சபையர் (நீலம்) ஆகிய மூன்று இல்லங்களுக்கிடையில் போட்டி நிகழ்சிகள் பாடசாலை மைதானத்தில் கடந்த மாதம் இறுதியில் ஆரம்பிக்கப்பட்டு பெரு விழையாட்டுக்கள், மைதான நிகழ்சிகள்,திறந்த போட்டிகள் என பல பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டு தங்களது பங்களிப்பை வழங்கினார்கள்.
இறுதி நாள் நிகழ்வில் கடற், பேண்ட், தேகபயிற்சி அணிவகுப்பு மரியாதை, கழகங்களுக்கிடையிலான அஞ்சலோட்டம், நடன கண்காட்சி என பல நிகழ்வுகள் மைதானத்தை சிறப்பித்திருந்தது.
இல்லங்கள் அலங்கரிப்பில் றுபி இல்லம் சிவப்பு நிறத்தில் காலி கோட்டையாக காட்சியளித்தது. சபயர் இல்லம் நீல நிறத்தில் தோகை விரித்த மையில் போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது. எமரல்ட் பச்சை நிறத்தில் இயற்கை அழகை காட்சிப்படுத்தியிருந்தன.
இறுதிப் பரிசளிப்பின் போது எமரல் (பச்சை) இல்லம் 594 புள்ளிகளை பெற்று மூன்றாம் இடத்தையும் றூபி (சிவப்பு) இல்லம் 708 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தினையும் சபையர் (நீலம்) 718 புள்ளிகளை பெற்று முதலாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.
வெற்றி பெற்ற இல்லங்கள் மற்றும் மாணவர்களுக்கு அதிதிகளால் வெற்றிக் கிண்ணங்கள், சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பாடசாலையின் பழைய மாணவரும் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருமான ஏ.எம். லத்தீப், பிரதி கல்விப் பணிப்பாளர் ஜிஹானா ஆலிப் உட்பட பழைய மாணவர் சங்கத்தினர், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.


Related Posts

Our Facebook

GENERAL ELECTION-2020 - DIGAMADULLA DISTRICT

GENERAL ELECTION-2020 -DIGAMADULLA DISTRICT

GENERAL ELECTION-2020

Popular Posts