கல்வி | கல்வி | 2020-02-28 00:36:12

 பெரியநீலாவணை புலவர்மணி சரிபுதீன் மகா வித்தியாலயத்தில் புதிய வகுப்பறை கட்டடம் திறந்து வைப்பு.

(ஏ.எல்.எம்.ஷினாஸ்,ஜெ.எம்.மின்ஹாஜ்,ஹூதா உமர், நிப்றாஸ் மன்சூர்)

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட  பெரியநீலாவணை புலவர்மணி சரிபுதீன் மஹா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறை கட்டடத்தை  திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று மாலை (27.02.2020) பாடசாலையின் அதிபர் எம்.எம். முஹம்மட் நியாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் பிரதம அதிதியாக கலந்து கொண்டு  வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார்.

பாடசாலையின் நீண்ட காலத் தேவையாக இருந்த இந்த வகுப்பறை கட்டிடம் மூன்று மாடிகளைக் கொண்டது. கிழக்கு மாகாண சபையின் ஒரு கோடி நாற்பது இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் சகல வசதிகளுடன் இந்த புதிய வகுப்பறை கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.

கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல், சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹூதுல் நஜீம் ஆகியோர் கௌரவ அதிதியாக கலந்து கொண்டனர். 

மேலும் பிரதி அதிபர்; எம்.சி.நசார், உதவி அதிபர் ஹஸ்மி மூசா, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திக் சங்கத்தினர் , பழைய மாணவர்கள் என பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன.
 


Related Posts

Our Facebook

நாட்டின் புதிய தலைமைக்கு வாழ்த்துக்கள்

நாட்டின் மாண்புமிகு பிரதமர்

இளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்

Popular Posts