கலை இலக்கியம் | கல்வி | 2020-02-20 23:24:01

தெ.கி. பல்கலை ஊடக கற்கை மாணவர்கள் தலை நகருக்கு களப்பயணம்

இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஊடக கற்கை நெறியை தொடரும் மாணவர்கள் இரண்டு நாட்கள் கள விஜயத்தை மேற்கொண்டு நேற்று(19) கொழும்புக்கு சென்றனர்.

இதன் போது இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், சுயாதீன தொலைக்காட்சி நிலையம், லேக் ஹவுஸ் பத்திரிகை ஸ்தாபனம், தமிழ் மிரர், கெப்பிட்டல் வானொலி, பாராளுமன்றம் போன்ற பல இடங்களுக்கு சென்று ஊடக செயற்பாடுகளை பார்வையிட்டனர்.

இதில் தென் கிழக்கு பல்கலை கழக மொழித் துறை தலைவர் பேராசிரியர் றமீஸ் அப்துல்லா, விரிவுரையாளர் முஸ்தாக் ஆகியோரும் கலந்து கொண்டனர். சுமார் 40 மாணவர்கள் கலந்து கொண்ட இந்த களப்பயணம் பல்கலைக் கழகத்தின் வரலாற்றில் முக்கியமானதாகும் என பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.


Related Posts

Our Facebook

நாட்டின் புதிய தலைமைக்கு வாழ்த்துக்கள்

நாட்டின் மாண்புமிகு பிரதமர்

இளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்

Popular Posts