பிராந்தியம் | சமூக வாழ்வு | 2020-10-02 06:48:45

சமூகத்தை பற்றி சிந்திக்கின்றவர்களின் கரங்களை பலப்படுத்த வேண்டும் .- கல்முனை மாநகர சபை முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப்

(எம்.என்.எம்.அப்ராஸ்)

கிழக்கு இளைஞர்கள் அமைப்பின்
மாதாந்த ஒன்று கூடல் ஸ்தாபக தலைவர் தானிஸ் ரஹ்மத்துல்லாஹ் தலைமையில் மாளிகைக்காடு பிஸ்மில்லாஹ் ஹோட்டலில் நேற்று (08) இடம்பெற்றது.

இதன் போது கல்முனை மாநகர சபை முன்னாள் முதல்வரும்,அகில.இலங்கை மக்கள் காங்ரஸ் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும்,மெற்றோ பொலிட்டன் கல்லூரியின் ஸ்தாபகருமான சிராஸ் மீராசாஹிப் , பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில்


பதவி அதிகாரம் என்பது இறைவன் கொடுப்பதாகும் . கடந்த கல்முனை மாநகர முதல்வராக இருந்த காலத்தில் இந்த கல்முனை மாநகர் மக்களும் ,இப் பிராந்தியத்தில் இன மத பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் என்னால் முடிந்தளவு மக்கள் பணி செய்துள்ளேன்.
இந்த நிமிடம் வரை மக்களுக்காய்
என்னால் முடிந்த சேவையை செய்து வருகிறேன். இந்த அமைப்பின் ஊடாக இளைஞர் ,யுவுதிகளாகிய நீங்கள்
சரியான வழிகாட்டல் மூலம் நாட்டிற்கும் ,சமூகத்திற்க்கும் உங்கள்
நல் பங்களிப்பை முன்னெடுக்க வேண்டும் .எதிர்வரும் நாட்களில் தேர்தல் காலமாக காணப்படுகின்றது .சமுகத்தை பற்றி சிந்திக்கின்றவர்கள் யார் ? இந்த இளைஞர் ,யுவுதிகளாகிய உங்களின் தேவைப்பாடுகளை பற்றி சிந்திக்க கூடியவர் யார்? என்பதை பார்த்து அவர்களின் கரங்களை பலப்படுத்த வேண்டும் அது யாராக இருந்தாலும் சரியே என்றார் .


அத்துடன் உங்கள் அமைப்பினால்
இளைஞர்கள் ,யுவதிகளில் இருவரை
தெரிவு செய்து தாருங்கள் அவர்களுக்கு எங்களது மெற்றோ பொலிட்டன் கல்லூரியினூடாக உயர் டிப்ளோமா பாடநெரியை 100% இலவசமாக பயில்வதற்கு வசதி செய்து தருவதாக உறுதியளித்தார்.

இதன்போது அமைப்பின் எதிர்கால நடவடிக்கை பற்றி
கலந்துரையாடப்பட்டதுடன்
அமைப்பின் நிர்வாகிகள் , இளைஞர் யுவதிகள் பலர் கலந்துகொண்டனர்.


Related Posts

Our Facebook

GENERAL ELECTION-2020 - DIGAMADULLA DISTRICT

GENERAL ELECTION-2020 -DIGAMADULLA DISTRICT

GENERAL ELECTION-2020

GENERAL ELECTION-2020

Popular Posts