பிராந்தியம் | அரசியல் | 2020-02-04 15:05:49

தேசிய கீத விவகாரத்தில் கருணா செய்தது தவறு- கோடீஸ்வரன் எம்.பி குற்றச்சாட்டு

பாறுக் ஷிஹான்

தமிழ் தேசியத்தையும் தமிழ் மக்களையும் காட்டி கொடுக்கின்ற செயற்பாட்டை கருணா அம்மான்   கைவிட வேண்டும்  என அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

அண்மையில் பிரதமர் தலைமையில் இடம்பெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் சிங்கள மொழியில் மாத்திரம் தேசியகீதம் பாடுவதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை என தனது கருத்தை முன்வைத்திருக்கிறார் என்ற கருத்திற்கு செய்தியாளர் சந்திப்பில் தனது   கண்டனத்தை   அவரது  அலுவலத்தில் திங்கட்கிழமை(3) மாலை
 இடம்பெற்ற ஊடக சந்திப்பின்   முன்வைத்து மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில்

சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்ற கருத்தை முன் வைத்திருக்கும்  கருணா தமிழ் மக்களுக்கு  தான் திருந்தி விட்டதாக பாசாங்கு செய்து வேடமிட்டு இருப்பது மீண்டும் தமிழ் மக்களுக்கு புலனாகிவிட்டது .பாரத தேசத்திலும் ஒருவரும் பல மொழிகள் காணப்படுகின்ற போதும் ஒரு முறையில் மாத்திரம் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது என கருணா சுட்டிக்காட்டி இருப்பது அவரது மடமை உணர்த்துகிறது . 


தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை காட்டிக்கொடுத்து போராட்டத்தை குழிதோண்டிப் புதைத்த கருணா  தான் திருந்திவிட்டதாக மக்களுக்கு பாசாங்கு காட்டுகிறவராகத்தான் இருக்கின்றார்.இந்திய தேசத்தில் பாடப்படுகிற  தேசிய கீதமானது அங்கு வாழும் சிறுபான்மை மக்களது மொழியான வங்காள மொழியிலே  பாடப்படுகிறது. இந்தியாவை ஒப்பிட்டு இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் பேசுவது அரசியல் ரீதியாக அவர் நிறைய விடயங்களை அறிந்து கொள்ள வேண்டும். இந்திய தேசம் பல மாநில கொண்ட ஒரு நாடு  அங்கு  அதிகாரப்பரவலாக்கம் வழங்கப்பட்டதோடு மாநில சுயாட்சி நிலவுகிறது. இலங்கையை பொறுத்தவரையில் எந்த ஒரு மாநில சுயாட்சியும் வழங்கப்படவில்லை.


அரச கரும மொழியாக தமிழ் மொழி இருக்கும் போது தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படுவதால் எந்தவித பிரச்சினையும் இல்லை மாறாக இன ஒற்றுமைதான் ஏற்படும்.விமல் வீரவன்ச சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்கின்றார் அவருக்கும் கருணாவிற்கும் எந்த வித வித்தியாசமும் இல்லை. தமிழ் மக்களை காட்டிக்கொடுக்கின்ற நடை பிணம் . தமிழ் தேசியத்தையும்இதமிழ் மக்களையும் காட்டி கொடுக்கின்ற செயற்பாட்டை கருணா கைவிட வேண்டும்.


வருகின்ற பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாகவும் பாராளுமன்ற வேட்பாளர் தெரிவு தொடர்பாகவும் அதிலே  அம்பாறை  மாவட்டம் சார்பாக   வேட்பாளர்கள் சம்பந்தமாக  வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கிடைத்துவருகின்றது. 
  இந்த மாவட்டத்தில் கிட்டத்தட்ட நான் நினைக்கின்றேன் தொண்ணூற்று  இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருக்கின்றனர். நன்கு படித்த தேசியத்தில் பற்றுறுதி கொண்ட இளையோர்களுக்கு  தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற அந்த சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது.


 ஒன்றாக சேர்ந்து பயணிக்கும் பொழுது  இரண்டு பிரநிதித்துவத்தை பெறக்கூடிய  இடத்தில் கூட்டமைப்பு  இருக்கின்றது . பேரினவாத சக்திகளின் மூலம் சிறு சிறு கட்சிகள் களமிறங்கியிருக்கின்றது .   தேசியத்தை  சிதைக்க  செயற்படுகின்ற சில சக்திகளின் மூலமும் சில குழுக்கள்    உடைப்பதற்காக இசிதைப்பதற்காக களமிறங்கப்பட்டிருக்கின்றன.  அதிலே பேரினவாத சிங்கள கட்சிகளுடன் செயற்படுகின்ற பேரினவாதக் கட்சிகளில் கைக்கூலிகளாக ஏற்படுகின்ற அல்லது சிங்கள கட்சிகளுக்கு ஜால்ரா  அடிக்கின்ற சில கட்சிகள்இ சுயேச்சைக் குழுக்கள் தொடர்பாகவும் தமிழ் மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும் என தெரிவித்தார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts