கல்வி | கல்வி | 2020-01-29 14:39:29

சாய்ந்தமருது தைபா அரபுக் கல்லூரியில் 08 மாணவிகளுக்கு மௌலவியா பட்டம்

(அஸ்லம் எஸ்.மௌலானா)

சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரியில் இருந்து இம்முறை 08 மாணவிகள் மௌலவியா பட்டம் பெற்று வெளியேறுகின்றனர் என்று கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி தெரிவித்தார்.

இக்கல்லூரியில் ஐந்து வருட கால அல்-ஆலிம் கற்கை நெறியை சிறப்பாக பூர்த்தி செய்துள்ள இவர்கள் சென்ற வாரம் இடம்பெற்ற இறுதிப் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இப்பரீட்சை முடிவுகளின்படி ஜுனைதீன் ஜுப்னா பானு (சென்றல் கேம்ப்), ஆதம்பாவா பாத்திமா றிஸ்னியா பேகம் (சாய்ந்தமருது), முஹம்மத் பாயிஸ் பாத்திமா அஸ்கா (சாய்ந்தமருது), முஹம்மத் காசிம் றிஸ்வானா (சம்மாந்துறை), ஜைனுலாப்தீன் பாத்திமா சிப்னா (கல்முனை), நிலாம் பாத்திமா ரிப்னா (கல்முனை), சுபைதீன் பாத்திமா ஸபா ஸம்ஹா (சாய்ந்தமருது), ஜமாலுத்தீன் பாத்திமா ஸப்னா (மாவடிப்பள்ளி) ஆகியோரே 'தைபிய்யா' எனும் பட்டத்துடன் மௌலவியாக்களாக வெளியேறுகின்றனர்.

இதற்கு முன்னர் இக்கல்லூரியில் இருந்து கடந்த இரு தொகுதி மாணவிகளில் 09 பேர் மௌலவியா பட்டம் பெற்று வெளியேறியுள்ளனர் என்றும் கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா சுட்டிக்காட்டினார்.

கடந்த 2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, சிறப்பாக இயங்கி வருகின்ற இக்கல்லூரிக்கு ஜீ.சி.ஈ.சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவிகள் உள்வாங்கப்பட்டு, அங்கு மௌலவியா பட்டத்திற்கான இஸ்லாமிய மார்க்கக் கல்வியுடன் ஜீ.சி.ஈ. உயர் தரப் பரீட்சைக்கு அம்மாணவிகள் தயார்படுத்தப்படுகின்றனர். கடந்த காலங்களில் இக்கல்லூரியில் இருந்து ஜீ.சி.ஈ. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய பெரும்பாலான மாணவிகள் சித்தியடைந்து, பல்கலைக்கழக அனுமதி பெற்று, உயர்கல்வி கற்று வருகின்றனரனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts