கலை இலக்கியம் | சமூக வாழ்வு | 2019-11-14 11:23:40

சிலருக்கு நான்!

நெத.அன்சார்

சிலருக்கு நான் அன்பு
சிலருக்கு நான் அடிமை.

சிலருக்கு நான் அழகன்
சிலருக்குநான் அசிங்கம்.

சிலருக்கு நான் அமைதி
சிலருக்குநான் ஆணவம்.

சிலருக்கு நான் இன்பம்
சிலருக்கு நான் துன்பம்.
சிலருக்கு நான் உயிர்
சிலருக்கு நான் உறவு.

சிலருக்கு நான் உயர்வு
சிலருக்கு நான் தாழ்வு.
சிலருக்கு நான் உண்மை
சிலருக்கு நான் பொய்.

சிலருக்கு நான் ஏழை
சிலருக்கு நான் ஏழனம்.
சிலருக்கு நான் நண்பன்
சிலருக்கு நான் துரோகி.

சிலருக்கு நான் நஸ்டம்
சிலருக்கு நான் கஸ்டம்.
சிலருக்கு நான் நட்பு
சிலருக்கு நான் எதிரி.

சிலருக்கு நான் சிரிப்பு
சிலருக்கு நான் சோகம்.
சிலருக்கு நான் பாசம்
சிலருக்கு நான் வேசம்.

சிலருக்கு நான் தூரம்
சிலருக்கு நான் பாரம்.
சிலருக்கு நான் வள்ளல்
சிலருக்கு நான் கஞ்சன்.

சிலருக்கு நான் பெருமை
சிலருக்கு நான் பொறாமை.

சிலருக்கு நான் நல்லவன்
சிலருக்கு நான் கெட்டவன்.

சிலருக்கு நான் கோமாளி
சிலருக்கு நான் கோபக்காறன்.

சிலருக்குநான் புத்திசாலி
சிலருக்கு நான் முட்டாள்.

சிலருக்கு நான் தேவை
சிலருக்கு நான் தொல்லை.

சிலருக்கு நான் ராசியானவன்
சிலருக்கு நான் ராட்ஷசன்

சிலருக்குநான் சந்தோசம்
சிலருக்கு நான் சந்தேகம்.

சிலருக்கு நான் கொடுப்பவன்
சிலருக்கு நான் கொடுமைக்காறன்.

சிலருக்கு நான் காதல்
சிலருக்கு நான் கயவன்.
சிலருக்கு நான் வீரன்
சிலருக்கு நான் கவலன்.

ஆனால் நான் யாரென்று எனக்கே
தொியவில்லை....


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts