கலை இலக்கியம் | சமூக வாழ்வு | 2019-11-13 22:22:49

காதலுடன்

(மருதமுனை நிஸா)

காற்றைத் தூதுவிடப்பார்க்கிறேன்
காற்றாவது சொல்லுமா உன்னிடம் என்-
காதலைப்பற்றி..! என்-
காத்திருப்பின் கனதியைப்பற்றி!..

காத்திருந்து 
காதலித்தவளாய் இருந்து
காதலித்தபடி காத்திருக்கிறேன்
காதலா உனைக்காண..!

காற்றோடு போய்விடாது
காப்பாற்றி வைத்திருக்கிறேன்
காதலா உன் மேலுள்ள
காதலை...!

காதல் அதை உன்மேல் கொண்டதனால்
காத்திருப்பையும் என்னவோ
காதலிக்கத்தான் தோன்றுகிறது

காணரம் இல்லாமல் 
காதலித்தவள் இன்று
காரணமாய்த்தான்
காத்திருக்கிறேன் உனக்காக..!

காக்க வைத்து ஏமாற்றிடாதே
காதலுடன்,
காத்திருக்கும் உன் 
காதலியை!...


Our Facebook

GENERAL ELECTION-2020 - DIGAMADULLA DISTRICT

GENERAL ELECTION-2020 -DIGAMADULLA DISTRICT

GENERAL ELECTION-2020

GENERAL ELECTION-2020

Popular Posts