உள்நாடு | அரசியல் | 2019-11-08 07:21:41

மருதமுனை அல்ஹம்ரா வீதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கருத்தரங்கு..!

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து மருதமுனை அல்ஹம்ரா வீதியில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரசார கருத்தரங்கு இன்று புதன்கிழமை கல்முனை மாநகர முதல்வரும் கட்சியின் உயர்பீட உறுப்பினரும் மருதமுனை அமைப்பாளருமான சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்றது.

இதில் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான கலாநிதி ஏ.எம் ஜெமில், ஏ.எல்.தவம், கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஷ், மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஆர் அமீர், எம்.எஸ் உமர் அலி, முன்னாள் பிரதி முதல்வர் ஏ.ஏ.பஷீர், முன்னாள் உறுப்பினர்களான சட்டத்தரணி அன்சார் மௌலானா, எம்.எம் முஸ்தபா உட்பட கட்சியின் மருதமுனை மத்திய குழு உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.


Related Posts

Our Facebook

Popular Posts