கல்வி | கல்வி | 2019-11-05 08:57:42

அல்-ஹம்றா வித்தியாலயத்தில் தவணைப் பரீட்சைகளில் அதிக புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு

மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலயத்தில் 2019ஆம் ஆண்டின் தவணைப் பரீட்சைகளில் அதிகூடிய புள்ளிகளை பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு அண்மையில் பாடசாலையின் அதிபர் ஜனாப். ஐ. உபைதுல்லாஹ் அவர்களின் தலைமையில் பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.


நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் சிரேஷ்ட உதவி நூலகரான ஜனாபா. மஷ்ரூபா மஜீத் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இம் மாணவர்களுக்கான பரிசுப் பொருட்களை லண்டன் நகரில் வசிக்கும் மருதமுனையைச் சேர்ந்த ஜனாப். பீ.எம்.எம். தஸ்னீம் அவர்கள் அன்பளிப்பு செய்திருந்தார்.

2019 ஆம் ஆண்டின் ஒவ்வொரு தவணைப் பரீட்சையிலும் வகுப்பு வாரியாக அதிக புள்ளிகளை பெற்றுக்கொண்ட மாணவர்கள் பரிசு பொருட்களும் சான்றிதழ்களும் வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டது.


Related Posts

Our Facebook

GENERAL ELECTION-2020 - DIGAMADULLA DISTRICT

GENERAL ELECTION-2020 -DIGAMADULLA DISTRICT

GENERAL ELECTION-2020

GENERAL ELECTION-2020

Popular Posts