தொழிநுட்பம் | அரசியல் | 2019-11-01 13:52:06

ஐக்கிய தேசிய முன்னணி பங்காளி கட்சிகளிடையே இன்று உடன்படிக்கை கைச்சாத்து.

ஊடகப்பிரிவு

ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று (01) தாஜ் சமுத்ரா ஹோட்டலில் கைச்சாத்திடப்பட்டது.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையிலேயே கூட்டணிக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

உடன்படிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சி,தமிழ் முற்போக்கு கூட்டணி,முஸ்லிம் காங்கிரஸ்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,ஜாதிக ஹெல உருமய உட்பட 10ற்கும் அதிகமான கட்சிகள் கைச்சாத்திட்டுள்ளன.

இந்த நிகழ்வின்போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கலந்து கொண்டதோடு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக கட்சியின் தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார். மேலும் இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீனும் கலந்துகொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது...


Related Posts

Our Facebook

GENERAL ELECTION-2020 - DIGAMADULLA DISTRICT

GENERAL ELECTION-2020 -DIGAMADULLA DISTRICT

GENERAL ELECTION-2020

Popular Posts