கலை இலக்கியம் | சமூக வாழ்வு | 1970-01-01 05:30:00

மகனே சுஜித்!.

மருதமுனை நிஸா

விசாலமான மண்ணறையை விட
நெருக்கமான அந்தக் குழி
வேகமாய் உறிஞ்சியதே மகனே!...

ஆறடியில் அடக்கும் முன்

நூறடி சப்பித்துப்பிய எச்சிலாகி

போனாயே மகனே!....

ஆழ்துளை கிணறல்ல அது
ஆள் தனை விழுங்கும்
மரணவறை!....

சின்னதாய் உன் சினுங்கலையே
நான் தாங்கமாட்டேன்
இத்தனைநாளும்
உன் உயிர் என் கண்முன் பதறியும்
காப்பாற்ற முடியாத பாவியானேனே!...

உலகமே பேசப்படும் மகனாய்
உனை வளர்க்க ஆசைப்பட்டேன் அது-
இந்த வடிவில் பேசப்படும் என்பதனை
நான் உணரவில்லை என் மகனே!..

கருவறையில் மூச்சுத்திணற
விட்டதில்லையே நான்-உனை
மூவிருநாளாய் நீ திணறியே
துடிதுடித்தாயே
உனை காக்கமுடியாத
பாவியாகிப்போனேனே!...

பெற்றமனம் நான்
பதறுகிறேன்
மற்றமனமெலாம் ஓலமிட்டழுகிறது
மகனே!...

உன்னால் படித்தனர் பாடங்கள் பல
இந்நாளில் கிடைத்தது
இவர்களுக்கு நல்ல படிப்பினை!..

நாங்கள் அடக்கம் செய்தது
உன் உடலை மட்டுமே
நீ இறக்கவில்லை மகனே
மறக்க முடியாத சரித்திரம் நீ!..

உன் விதி இதுதானோ
என்று இப்போதுதானே
புரிந்தது!...Our Facebook

GENERAL ELECTION-2020 - DIGAMADULLA DISTRICT

GENERAL ELECTION-2020 -DIGAMADULLA DISTRICT

GENERAL ELECTION-2020

GENERAL ELECTION-2020

Popular Posts