ஆரோக்கியம் | கல்வி | 2019-10-27 18:25:50

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் தேசிய கைகழுவும் தினம்

ஏ.எல்.எம்.ஷினாஸ்

தேசிய கைகழுவும் தினத்தை முன்னிட்டு கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. தேசிய கை கழுவும் தின நிகழ்வு பாடசாலையின் அதிபர் எம்.ஏ.சமதா மஹ்மூத் லெப்பை தலைமையில் (25) நடைபெற்றது.

இதில் கல்முனை பிராந்திய தாய் சேய் நல வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ.சி.எம்.பஸால், பாடசாலை மாணவர்களுக்கு சுத்தம் பற்றியும் சுகாதாரம் பேணும் விடயங்கள் பற்றியும் விளக்கமளித்தார்.
இந்த நிகழ்வில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி எச்.எம்.றிஸ்பின், இப்பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் நியாஸ் எம்.அப்பாஸ் உட்பட பொது வைத்திய அதிகாரிகள்,; ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


Related Posts

Our Facebook

GENERAL ELECTION-2020 - DIGAMADULLA DISTRICT

GENERAL ELECTION-2020 -DIGAMADULLA DISTRICT

GENERAL ELECTION-2020

Popular Posts