விளையாட்டு | விளையாட்டு | 2019-10-24 16:10:07

தேசிய இளம் பறவைகள் வெற்றிக்கிண்ண போட்டி 

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

இலங்கை புறாக்கள் பந்தய சம்மேளனம் ( Sri Lanka Racing pigeon federation)    ) ஏற்பாடு செய்திருந்த புறாக்களை பறக்கவிடும் தேசிய இளம் பறவைகள் வெற்றிக்கிண்ண போட்டி நிகழ்ச்சியின் இரண்டவது போட்டி  கிழக்கு மாகாணத்தின் அம்பாரை மாவட்டத்தில் முதல் தடவையாக கல்முனை கடற்கரைபள்ளி திறந்தவெளியில் அண்மையில்  நடைபெற்றது.

சம்மேளனத்தின் ஒழுங்குபடுத்தல் இணைப்பாளர் எம்.எம்.முபீம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுமார் 600 புறாக்கள் பறக்கவிடப்பட்டன.

நான்கு சுற்று போட்டிகளை கொண்ட இந்த சம்பியன் வெற்றிக்கிண்ண சுற்றுப் போட்டியின் முதலாவது போட்டி கண்டியில் கடந்த மாதம் நடைபெற்றது. தற்போது இரண்டாவது போட்டி கல்முனையில் நடைபெற்றிருக்கிறது. மூன்றாவது நான்காவது போட்டிகள் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களில் நடைபெற உள்ளது. புறா வளர்பாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கத்தோடு இந்த போட்டி நிகழ்சி நடாத்தப்படுவதாக ஒழுங்குபடுத்தல் இணைப்பாளர் இங்கு தெரிவித்தார்.

இந்தப் போட்டியானது புறா உரிமையாளரது இடத்திற்கும் பறக்கவிடப்பட்ட இடத்திற்கும் இடையிலான தூரம் கணிக்கப்பட்டு புறா பறந்த நேரம் வேகம் தீர்மானிக்கப்பட்டு புள்ளிகள் வழங்கப்படவுள்ளன. 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று அதிகூடிய புள்ளிகளை பெறும் வெற்றியாளருக்கு பணப்பரிசுகளும் வெற்றிக் கிண்ணங்களும் வழங்கப்படவுள்ளன. இந்த போட்டி நிகழ்ச்சியில் புறா வளர்ப்பாளர்கள் புறா வளர்க்கும் சங்கங்கள், கழகங்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


Related Posts

Our Facebook

நாட்டின் புதிய தலைமைக்கு வாழ்த்துக்கள்

நாட்டின் மாண்புமிகு பிரதமர்

இளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்