விளையாட்டு | விளையாட்டு | 2019-10-21 16:35:19

காத்தான்குடி சொக்க மாஸ்டர் அணி சம்பியன் கிண்ணத்தை பெற்றுக்கொண்டது

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

 மருதமுனை மர்ஹூம் எச்.எல்.ஜமால்தீன் எஸ்.பி பவுண்டேசன் நடாத்திய 40 வயதுக்கு மேற்பட்ட உதைபந்தாட்ட அணிகளுக்கிடையிலான மின்னொளி உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்வு என்பன  (15) இரவு மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இந்த சுற்றுப்போட்டியில் திருகோணமலை ஒலிம்பிக் சொக்க மாஸ்டர், காத்தான்குடி சொக்க மாஸ்டர்,  திருகோணமலை சொக்க மாஸ்டர், மருதமுனை கிரீன் மெக்ஸ் சொக்க மாஸ்டர் ஆகிய நான்கு அணிகள் கலந்து கொண்டன.

இந்த சுற்றுப்போட்டியில் ஆகக்கூடுதலான புள்ளிகளைப் பெற்று காத்தான்குடி சொக்க மாஸ்டர் அணி சம்பியன் கிண்ணத்தை பெற்றுக்கொண்டது இரண்டாமிடத்தில் திருகோணமலை சொக்கர் அணி கைப்பற்றியது. மூன்னறம் நான்கம் இடங்களை மூன்றாமிடத்தில் மருதமுனை கிரீன் மெக்ஸ் சொக்க மாஸ்டர்,   திருவண்ணாமலை ஒலிம்பிக் சொக்க மாஸ்டர் ஆகிய அணிகள் பெற்றுக்கொண்டன.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஆரிப் சம்சுதீன் கலந்து கொண்டார்.  கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஷ் கௌரவ அதிதியாகவும்  மாநகர சபை உறுப்பினர்களாக எம். எஸ். எம். ஹாரிஸ் நவாஸ்,  ஏ.ஆர். அமீர் பிரதி அதிபர் அப்துல் நசார்,  சிசேஸ்ட ஊடகவியலாளர்  எம்.எல்.எம்.ஜமால்தீன் , ஆசிரியர் ஹம்ஸா மஜீட்  ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

கலந்து கொண்ட அதிகளால் வெற்றிபெற்ற அணிகளுக்கான வெற்றிக்கேடயங்கள் வழங்கி வைக்கப்பட்டன.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts