கல்வி | கல்வி | 2019-10-21 16:15:02

மாகாண மட்ட விஞ்ஞான வினாடிப் போட்டியில் மருதமுனை வலீத் ஜஸ்னா முதலிடம்

(அஸ்லம் எஸ்.மௌலானா)

மாகாண மட்ட தமிழ் மொழிமூல விஞ்ஞான வினாடிப் போட்டியில் தரம்-07 பிரிவில் மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலய மாணவி பாத்திமா ஜஸ்னா கிழக்கு மாகாணத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

இதற்கான சான்றிதழ் மற்றும் பதக்கத்தினை நேற்று பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில் கல்முனைப் பிராந்திய வாய்ச்சுகாதார வைத்திய அதிகாரி எம்.பி.அப்துல் வாஜித் வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் ஐ.உபைதுல்லா, தொழிலதிபர் ஏ.ரியாஸ் மற்றும் பயிற்றுவித்த ஆசிரியர்களும் பங்கேற்றிருந்தனர்.

கடந்த வருடம் இடம்பெற்ற சமூக விஞான போட்டியில் தரம்-6 பிரிவில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ள இம்மாணவி 2017ஆம் ஆண்டு நடைபெற்ற தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவர் ஆஷியா பவுண்டேஷன் நிறுவனத்தின் நிபுணத்துவ ஆலோசகரும் கல்முனை மாநகர சபையின் திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தருமான எம்.ஐ.எம்.வலீத் தம்பதியரின் புதல்வி என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Related Posts

Our Facebook

Popular Posts