பிராந்தியம் | அரசியல் | 2019-11-10 17:43:09

சம்மாந்துறை பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட

எம்.எம்.ஜபீர்

சம்மாந்துறை பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தினை மக்கள் பங்களிப்புடனான வரவு செலவுத்திட்டமாக தயாரிப்பதற்காக சம்மாந்துறை பிரதேச சபையின்  தவிசாளர் ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் அவர்களின் பணிப்புரைக்கமைவாக மக்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெறும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இதற்கமைவாக சம்மாந்துறை பிரதேச சபையின் கீழுள்ள 19 சனசமூக நிலையங்களின் நிர்வாக பிரதிநிகளிடம் கருத்துகள் மற்றும் ஆலோசனை பெறும் கலந்துரையாடல்  சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் தலைமையில் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.

இதில் சம்மாந்துறை பிரதேச சபையின் உள்ளுராட்சி உதவியாளர் எஸ்.கருணகரன், சம்மாந்துறை பிரதேச சபையின் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.பஸ்மிலா, அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.தஸ்லிமா, சனசமூக நிலையங்களின் தலைவர்கள், செயலாளர்கள், பெருளாளர்கள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts