பிராந்தியம் | அரசியல் | 2019-10-10 08:00:06

அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட காலி மாவட்ட ஊடகவியாளர்கள் சந்திப்பு நிகழ்வு..

எஸ்.எல்.அப்துல்.அஸீஸ்

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்ககம் (கபே) அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட  காலி மாவட்ட  ஊடகவியாளர்கள் சந்திப்பு  நிகழ்வு நேற்று(09) காலி  டிக்சன் வீதி  ஊடக நிலையத்தில் இடம்பெற்றது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவும் நாளை (11)  இடம்பெறவிருக்கும் எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் தொடர்பாகவும்  ஊடகவியளாளர்களுடனான  சந்திப்புக்கான இன் நிகழ்வில் கலந்து கொண்ட  சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்ககம் (கபே) அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் உரையாற்றுகையில்,

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்ககம் (கபே) அமைப்பானது எதிர்வரும்  ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக நாடு முழுவதும் 7500 கண்காணிப்பாளர்களை நியமிக்கவுள்ளனர்.இதில் தற்போது மாவட்ட இணைப்பாளர் உட்பட 150 நீண்ட கால கண்காணிப்பாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கமைவாக இதுவரை எங்களுக்கு  109முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதில் அதிகளவான  முறைப்பாடுகள் வேட்ப்புமனு  தாக்கல் செய்த நாள் அன்று  கிடைக்கப்பெற்றவைகளாக உள்ளன. அதிலும் 96 முறைப்பாடுகள் சட்ட விரோத பிரச்சாரம்கள் தொடர்பானவைகளாகும். மேலும் 1982ஆம் ஆண்டு முதலாவது  ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்ற போது 6அபேட்சகர்களே போட்டியிட்டிருந்தனர். ஆனால்  2019ஆம் ஆண்டு தற்போது அது 35ஆக அதிகரித்துள்ளது. இதனை பார்க்கின்ற போது நாட்டின் பிரதான தலைவரை தேர்தெடுக்கும் இத் தேர்தல் நகைச்சுவையாக மாற்றப்பட்டுள்ளது என்றே கூறவேண்டியுயள்ளது. 

குறிப்பாக இத் தேர்தலில் போட்டியிடும் அபேட்சகர்களுக்கு  அரச ஊடகம்களில் சரி சமமான நேர ஒதுக்கீடு வழங்கப்படுகின்றது. அதே போன்று  இலவச தபால் சேவையும் ஒவ்வொரு  அபேட்சகர்களுக்கும் சரி சமமாக கிடைக்கப்பெறுகின்ற்து.  ஆனால் சில  அபேட்சகர்கள் இவ்வாறாக தமக்கு கிடைக்கும்  வரப்பிரசாரம்களை பாவித்து வேறு பிரதான  அபேட்சகர்களுக்கு பிரசாரம்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதனை அவதானிக்க கூடியதாகவுள்ளது.  இதானால்  எதிர்காலத்தில் இந்த தேர்தல் முறையில்  மாற்றம்களை கொண்டுவருவது அவசியமாகவே உள்ளது என குறிப்பிட்டார்.

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்ககம் (கபே) அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் தலைமையில் இடம்பெற்ற இவ்   ஊடகவியாளர்கள் சந்திப்பு  நிகழ்வில்,   கபே அமைப்பின் பணிப்பாளர்  சபை உறுப்பினர்  சுரங்கி ஆறியவன்ச,   கபே அமைப்பின் ஊடகத்துறைப் பணிப்பாளர்  அரவிந்த இந்துரஜீத், தென் மாகாண இணைப்பாளர்  பிரேமபந்த  ஜயத்திலக்க,   காலி மாவட்ட   இணைப்பாளர் தேவிக்கா  நில்மினி  ஆகியோர் கலந்துகொண்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts