பிராந்தியம் | கல்வி | 2019-10-08 22:55:57

சது/வீரத்திடல் அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் தின நிகழ்வு

மருதமுனை நிஸா

சது/வீரத்திடல் அல்-ஹிதாயா மகா வித்தியாலய உயர்தர மாணவர்களால் ஏற்பாடு செய்த ஆசிரியர் தின நிகழ்வு செவ்வாய் அன்று (08)பாடசாலை அதிபர் எம்.எல்.பதியுதீன் தலைமையில் பாடசாலையின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதம அதிதியாக ஓய்வு நிலை அதிபர் எம்.எல்.ஏ.கையூம் , கௌரவ அதிதிகளாக நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் எம்.பி.எம்.நவாஸ், கோட்டக்கல்விப் பணிப்பாளர் வி.நிதர்சினி, விசேட அதிதியாக ஆசிரிய ஆலோசகர் எம்.ஏ.எம்.றஷீட் அவர்களும் மற்றும் மாணவர்கள் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில்,
மாணவர்களின் கலைகலாசார நிகழ்வுகளும் பாடசாலையின் முன்னாள் ஓய்வு பெற்ற அதிபர் எம்.எல்.ஏ.கையூம் அவர்களுக்கு கௌரவிப்பும் எம்.எம்.ஏ.சத்தார் பழைய ஆசிரியரும் ஐ.எஸ்.ஏ.நியமனமும் பெற்றமைக்கான பாராட்டும் கௌரவிப்பும் அண்மையில் நடைபெற்ற அதிபர் சேவை பரீட்சையில் மூன்றாம் நிலையை பெற்றிருந்த ஏ.எம்.ஜெஸீல் ஆசிரியர் அவர்களுக்கு கௌரவமும் பழைய மாணவர்களில் 5 பேர் தொண்டர் ஆசிரியர் நியமனம் பெற்றுவந்தமைக்கான கௌரவமும் மற்றும் ஏனைய ஆசிரியர்களுக்கான கௌரவமும் நினைவு சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.


Related Posts

Our Facebook

Popular Posts