பிராந்தியம் | சமூக வாழ்வு | 2019-08-10 14:56:22

நடைபெறவிருக்கும் கலாசார விழா பற்றிய இறுதி தீர்மான கூட்டம்.

எஸ்.எல்.அஸீஸ்

கல்முனை கலாசார மத்திய நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் கலாசார விழா பற்றிய இறுதி தீர்மானங்கள் பற்றிய நிருவாகக் குழு கூட்டம் ஞாயிறன்று பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் தலைமையில் மருதமுனை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

கலாசார விழாவும் கலைஞர் கௌரவிப்பு நிகழ்வும் எதிர்வரும் 19ம் திகதி மருதமுனை கலாசார மண்டபத்தில் நடைபெறவிருக்கின்றது.
இவ்விழாவில், கவியரங்கு,நாடகம்,பொல்லடி,சிறுவர் நிகழ்ச்சிகள், கலைஞர் கௌரவிப்புகள்
என்பன தீர்மானங்களாக எட்டப்பட்டன.

குழுவின் அங்கத்தவர் புகைப்படங்களும் அன்றைய தினம் எடுக்கப்பட்டது.

கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் தலைமையும் சிரேஷ்ட சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.ஸாலிஹ் உபதலைமையும் கலாசார மேம்பாட்டு உத்தியோக்கத்தர் ஐ.எல்.றிஸ்வான் இணைப்பாளராகவும் கவிஞர் எம்.எம்.விஜிலி செயலாளராகவும் இந்நிகழ்வில் பொறுப்பேற்றுள்ளனர்.


Related Posts

Our Facebook

Popular Posts