பிராந்தியம் | கல்வி | 2019-10-07 20:04:24

சாய்ந்தமருது கமு/கமு/ஜீ.எம்.எம்.எஸ். வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை

எம்.என்.எம்.அப்ராஸ்

சாய்ந்தமருது ஜி.எம்.எம்.எஸ்.பாடசாலை 2019 தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை படைத்துள்ளது. இப்பாடசாலையில் மேற்படி பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 19 பேர் வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளை பெற்றுள்ளனர்.

இது தொடர்பாக பாடசாலை அதிபர்
அதிபர் யூ.எல்.நஸார் கருத்து தெரிவிக்கையில் குறிப்பாக இப் பாடசாலை வரலாற்றில் சுமார் 20 வருடங்களுக்கு பின்னர் அதிகூடிய மாணவர்கள் சித்தி பெறுபேறுகள் பெற்று சாதனை புரிந்துள்ளனர்

மேலும் இப்பெறுபேற்றினை பெறுவதற்கு உறுதுணையாகவிருந்த வகுப்பாசிரியர்களான எம்.சீ.ஜாபீர், எம்.பீ.எம்.சிராஜுடீன், ஏ.ஆர். எஸ்.ஜிப்ரியா, ஏ.ஆர்.நூர்லியா ஆகியோருக்கும், பகுத்தலைவர் எம்.ஏ.சீ.எல். நஜீம், ஏனைய ஆசியர்களுக்கும், பிரதியதிபர்காளான எம்.எஸ் எம்.ஆரிப், திருமதி கே.எம்.றாபீக் அவர்களுக்கும், பிரத்தியோக வகுப்பாசிரியர் ஏ.நஸ்ருத்தீன் பெற்றோர், பாடசாலை அபிவிருத்தி குழுவினர் மற்றும்ஆசிரிய ஆலோசகர்கள், முன்னாள் கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஏ.பீ.நஸ்மியா, தற்போதைய கோட்டக்கல்விப் ஐ.எல்.ஏ.ரகுமான், விசேடமாக வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் , மற்றும்
நலன் விரும்பிகள் அனைவருக்கும்
தமது நன்றியையும், பாராட்டுக்களையும் பாடசாலை அதிபர் தெரிவித்தார்.


Related Posts

Our Facebook

Popular Posts