ஆரோக்கியம் | சமூக வாழ்வு | 2019-09-19 12:20:03

விசேட தேவையுடையோருக்கான விண்ணப்பப் படிவம் வழங்கல்.

​​​​​​மருதமுனை நிஸா

அக்கரைப்பற்று பிரதேச செயலக சமூக சேவை பிரிவின் ஏற்பாட்டில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் விசேட தேவையுடையோருக்கான உபகரணங்களை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் நாளை (20.09.2019) காலை.09.00 காரியலத்தில் வழங்கப்பட இருக்கின்றது.

தங்களின் பயன்பாட்டுக்குப் பொருத்தமான உபகரணங்களை பெற்றுக்கொள்வதற்காக பள்ளிக்குடியிருப்பு-1 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரின் காரியாலயத்தில் வருகைதந்து இலகுவாக விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்க முடியுமான உபகரணங்கள்
1. சக்கர நாற்காலி
2. மூக்கு கண்ணாடி
3. கையால் உந்தும் முச்சக்கரவண்டி
4. ஊன்றுகோல்
5. வெள்ளைப்பிரம்பு
6. நடத்தல் சட்டகம்
7. காது கேட்கும் கருவி.


Related Posts

Our Facebook

நாட்டின் புதிய தலைமைக்கு வாழ்த்துக்கள்

நாட்டின் மாண்புமிகு பிரதமர்

இளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்

Popular Posts