பிராந்தியம் | கல்வி | 2019-09-09 22:15:12

பிள்ளையின் கல்வியில் பெற்றோரின் வகிபாகம்:பெற்றோருக்கான விழிப்புணர்வூட்டல்

மருதமுனை நிஸா

பிள்ளைகளின் பருவங்களை இனங்காண வேண்டும் .
இனங்காண்பதன் மூலமாகவே பருவங்களில் ஏற்படுகின்ற மாற்றங்களை அறியலாம். மாற்றங்களை அறிந்து பிள்ளைகளின் பிரச்சினைகளை அடையாளப்படுத்தி பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை வழங்க முடியும். என பிராதான விரிவுரையாளராக கலந்துகொண்ட எம்.எஸ்.எம்.ஜறூன் ஷெரீப்f தெரிவித்தார்.
மேலும்,
பிள்ளைகளின் உடல், உள ரீதியான மாற்றங்கள் ஏற்படுகின்ற வயது 9-12 ஆக இருக்கிறது. அதிகூடிய சுதந்திரமும் அதிகூடிய கட்டுப்பாடும் பிள்ளைகளின் நெறிபிறழ்விற்கு காரணமாக அமைகிறது. கண்டிப்பும் சுதந்திரமும் அளவோடு இருத்தல் வேண்டும் .புறக்கணிப்பு செய்யப்பட்ட பிள்ளைகளும் நெறிபிறழ்விற்கு ஆளாகின்றது. பிள்ளைகளின் ஒவ்வொரு செயற்பாட்டிலும் அதிக கவனம் செலுத்தி அவர்களின் குறைபாடுகளை இனங்காணவேண்டும். பிள்ளைகள் சமமாக வழிநடத்தப்பட வேண்டும் .அன்பு கூடிக்குறைவதிலும் பிரச்சினை இருக்கிறது என இவர் விளக்கமளித்தார்.
மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில், சனி (07.09.2019) அன்று
உளவியல் உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.ஆர்.தஹ்லான் ஏற்பாட்டில் நடைபெற்ற பெற்றோர்களுக்கான விழிப்புணர்வூட்டல் கருத்தரங்கிலே இவ்வாறு விளக்கமளித்தார்.

மேலும்,இளைஞர் சமுதாயத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்புக்கள் பெற்றோராகிய எமது கட்டாயக் கடமையாகும். வளர்ந்துவரும் எதிர்காலத்தின் சமூகமாக இருக்கின்ற எமது பிள்ளைகள் போதைப்பொருளுக்கு அதிகமாக அடிமையாகி இருக்கின்றனர். 1996 ம் ஆண்டை விட கல்வி வீதத்தில் மிகக் குறைவாகவே இருந்து வருகின்றது கவலைக்குரிய விடயமே என மருதமுனை ,நற்பிட்டிமுனை சமுர்த்தி வங்கி முகாமையாளர் எ.எம்.எம்.முபீன் தெரிவித்தார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts