பிராந்தியம் | கல்வி | 2019-09-05 19:48:16

மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலயத்தின் அதிபருக்கு பிரியாவிடை

மருதமுனை நிஸா

மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் ஏ.ஏ.குனுக்கத்துல்லாஹ் அவர்களுக்கு பாடசாலை சமுகம் ஏற்பாடு செய்த பிரியாவிடை நிகழ்வு புதன் (04.09.2019) அன்று பாடசாலையின் தற்போதைய அதிபர் ஐ.உபைத்துல்லாஹ் தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த பாடசாலையின் அதிபராக இருந்த ஏ.ஏ குனுக்கத்துல்லாஹ் அவர்கள் தற்போது அல்-மதீனா வித்தியாலயத்திற்கு இடமாற்றமானார்கள்.
இவர் , ஆரம்பத்தில் பட்டதாரி ஆசிரியராக பொத்துவில் மத்திய கல்லூரியில் கணிதப்பாட ஆசிரியராக கடமையாற்றி பின்னர் 2009ம் ஆண்டு ஆசிரியராக அல்-ஹம்றா பாடசாலைக்கு வந்து, 2012 ம் ஆண்டு அதிபராக நியமிக்கப்பட்டார் . இவரது சேவைக்காலத்தில் 5ம் தரம், சாதாரணதரம் பெறுபேற்றில் கல்முனை வலயத்தில் முதல் இடத்தை தக்கவைத்த பெருமையும் இவரையே சாரும். மாணவர்களின் கல்வி விடயத்தில் அதிக அக்கறையுடன் கடமையாற்றியுள்ளார்.

இவரது சேவைகளைப் பாராட்டி அதிபர்,
ஆசிரியர், மாணவர்கள் ,பழையமாணவர் சங்கம், மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் நினைவுச்சின்னமும் வாழ்த்துப்பாவும் வழங்கி கௌரவித்தனர்.

இந்நிகழ்விற்கு,
விசேட அதிதியாக பொறியியலாளர் எம்.எஸ்.எம்.பசீல், பறக்கத்டெக்ஸ் உரிமையாளர் அல்ஹாஜ்.எம்.ஐ.பரீட் ,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஸ்தபா, கௌரவ அதிதியாக கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல், அதிதிகளாக பிரதி கல்விப்பணிப்பாளர்களான ஜிஹானா ஆலிப், எஸ்.எல்.அப்துல் றஹீம் , கோட்டக்கல்வி அதிகாரி, பி.எம்.எம்.பதுர்தீன், பாடசாலை ஆசிரியர் மாணவர்கள், ஏனைய பாடசாலை அதிபர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts