பிராந்தியம் | சமூக வாழ்வு | 2019-08-13 10:15:19

முஸ்லிம்கள் சகல சவால்களுக்கும் துணிச்சலோடு முகங்கொடுத்து வெற்றியடைய இறைவனை பிரார்த்திப்போம்- கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எல் றபீக்

பாறுக் ஷிஹான்  

இஸ்லாத்தின் ஐம் பெரும் கடமைகளில் ஒன்றாகவும் இறுதியாகவும் ஹஜ் கடமை காணப்படுகிறது.புனிதத்துவமிக்க ஹஜ்ஜூப் பெருநாளை நமது நாட்டு முஸ்லிம்களும் உலகெங்கும் பரந்துவாழும் முஸ்லிம் உம்மத்துகளும் மகிழ்வுடன் இன்று கொண்டாடுகின்றனர்.  அவர்களுக்கு எனது உளம் கனிந்த ஹஜ்ஜூப் பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில்; மகிழ்ச்சியும் மனநிறைவும் அடைகின்றேன்  எனகல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எல் றபீக் விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் அச் செய்தியில் தெரிவிக்கப்படுவதாவது

நமது நாட்டில் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் அனைவரும் ஒற்றுமையாகவும் நல்லிணக்கத்தோடும் வாழ இறைவனை பிரார்த்தித்தவனாகவும் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

உலகில் வாழும் முஸ்லிம் சமூகத்துக்கு அடிப்படைவாதம், எந்தவொரு பயங்கரவாத செயலிலும் இல்லாமல் ஒற்றுமையுடன் நாட்டில் இனமத பேதமற்ற முறையால் வாழ வேண்டும். சகல சமூகங்களுக்குமிடையில் கசப்புணர்வற்ற நல்ல உணர்வோடும் புனித மக்காவில் ஹஜ்ஜாஜிகள் அனைவரும் தங்களது கடமைகளை நிறைவேற்றவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இறை ஆணைக்கு கட்டுப்பட்ட ஒரு குடும்பத்தின் மூன்று தியாகசீலர்களாம் அல்லாஹ்வின் தோழரான நபி இப்றாஹிம் (அலை) அவரின் துணைவியார்; அன்னை ஹாஜரா, தவப்புதல்வன் நபி இஸ்மாயில் (அலை) ஆகியோரின் மாபெரும் தியாகம் நமக்கெல்லாம் படிப்பினையைத் தந்ததோடு உலகம் அழியும் வரையும் இத்தியாகம் நம்மால் நினைவு கூறப்படவேண்டியதுமொன்றாகும். அன்னாரின் தியாகத்திற்கான உயர்ந்த சன்மானமே ஹஜ்ஜூப் பெருநாளாகும். இந்நாளில் முஸ்லிம்களின் வாழ்வில்  தியாக உணர்வு மென்மேலும் அதிகரிக்கட்டும். 

நாம் ஒவ்வொருவரும் அடுத்த மனிதனை நேசிக்கப் பழகிக் கொண்டால், இந்த உலகம் அமைதியடைந்து விடும். சக மனிதனை நேசிக்க முடியாதவர்களால் இறைவனை நேசிக்க முடியாது. அடுத்தவர் மீது நாம் வைக்கும் அதீதமான நேசம்தான் நம்மிடம் தியாக குணத்தை வளப்பதற்கு வழிவகை செய்கிறது. 

ஹஜ் என்கிற வரலாறு - நமக்கு வெறும் மார்க்கக் கடமையினை மட்டும் கற்றுத் தரவில்லை. அந்த வரலாற்றில் நமக்குப் படிப்பினையாக ஏறாளமான விடயங்கள் இருக்கின்றன. அவற்றினை நமது வாழ்வில் நடைமுறைப்படுத்துவோமேயானால் - இந்த உலகிலும், மறுவுலகிலும் நமது வாழ்க்கை மகிழ்ச்சியானதாக அமைந்து விடும்.

நமக்கு விருப்பமானவற்றை இறைவனுக்காகவும், சக மனிதனுக்காகவும் தியாகம் செய்யுமாறு இஸ்ஸாம் கூறுகிறது. இன்று நம்மிடையே ஏராளமானோர் வறுமையோடு போராடிக் கொண்டு வாழ்கையைக் கடத்திக் கொண்டிருப்பதை இந்தத் தியாகத் திருநாளில் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அவர்களுக்கு நம்மாலானா உதவிகளைச் செய்வதனூடாக நாம் இறைவனின் பொருத்தத்தைத் தேடிக் கொள்ள வேண்டும். 

நமது நாட்டில் இவ்வாறான தினங்களை சந்தோசமாகவும் நிம்மதியாகவும் கொண்டாட முடியாத வரலாறு இருந்தது. அவ்வாறான கரைபடிந்த அத்தியாயம் நீங்கி இன்று நாம் அனைவரும் நிம்மதியுடனும் சந்தோசத்துடனும் இன்றைய தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். அதற்காக எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு சுக்குர் செய்வோமாக! 


Related Posts

Our Facebook

GENERAL ELECTION-2020 - DIGAMADULLA DISTRICT

GENERAL ELECTION-2020 -DIGAMADULLA DISTRICT

GENERAL ELECTION-2020

GENERAL ELECTION-2020

Popular Posts