ஆரோக்கியம் | பொருளாதாரம் | 2019-06-22 00:11:29

புகையிரத ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

20.06.2019  நள்ளிரவு முதல் புகையிரத தொழிற்சங்கங்கள் சில இணைந்து வேலை நிறுத்த போராட்டத்தை அரம்பித்துள்ளன. 

புகையிரத ஊழியர்களின் பணிப் புறக்கணிப்பால் சுமார் 45 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுமார் 10 ரயில் சேவைகள் இன்றைய தினம் பணியில் ஈடுபட்டதாக புகையிரத சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட கூறினார். 

சில கோரிக்கைகளை முன்வைத்து நேற்று நள்ளிரவு முதல் புகையிரத பணியாளர்களது தொழிற்சங்க உறுப்பினர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

நிதி அமைச்சருடன், புகையிரத தொழிற்சங்க பிரதிநிதிகள் நே்றுற பேச்சுவார்த்தை நடத்திய போதும், அது தோல்வியில் முடிந்ததையடுத்து வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தனர். 

அதன்படி புகையிரத சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் இணைந்து இரண்டு நாள் பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தை அரம்பித்துள்ளனர்.


Related Posts

Our Facebook

GENERAL ELECTION-2020 - DIGAMADULLA DISTRICT

GENERAL ELECTION-2020 -DIGAMADULLA DISTRICT

GENERAL ELECTION-2020

Popular Posts