உள்நாடு | அரசியல் | 2019-06-03 12:30:48

முஸ்லிம் மதத் தலைவர்களின் கருத்தையும் கேட்டுத்தான் ஞானசார தேர- ஜனாதிபதி

ஞானசார தேரர் ஒரு பௌத்த பிக்கு.அவரை விடுதலை செய்யும்படி சிங்களபௌத்த தலைவர்களும் மகாநாயக்கதேரர்களும் உருக்கமானவேண்டு கோளை விடுத்தார்கள்.

அத்தோடு, முஸ்லிம் மதத்தலைவர்களிடமும் -மௌலவிமார்களிடமும் ஞானசாரதேரரை விடுதலை செய்வதைப் பற்றிஅவர்களின் கருத்தை வினவிய போது அவர்களும் அத்தேரரை விடுதலைசெய்வதை எதிர்க்கவில்லை என்பதைஎன்னிடம் தெரிவித்தார்கள். அதற்கமையவே தேரரை விடுதலைசெய்தேன் என்று ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேனதெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதைகுறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

தனிப்பட்ட ரீதியிலும் நாட்டின்அமைதியைப் பாதுகாக்கும் வகையிலும் செயற்படும்படியும் அப்படி நடந்துகொள்ளாவிட்டால் மீண்டும் அவரைகைது செய்ய நேரிடும் என்பதையும் அவரிடம் நான் அறிவுறுத்தியிருக்கின்றேன்.

அவரின் விடுதலை மோதல்களுக்குவழி வகுக்கக்கூடும் என சிலர் கருத்துத்தெரிவிக்கின்றார்கள். ஆயினும்மோதல்களைத் தவிர்த்து சகலரும்ஒற்றுமையாக வாழக்கூடிய ஒருசமூகத்தை உருவாக்குவதே எமது எதிர்பார்ப்பாகும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலைமேற்கொண்ட பயங்கரவாத அமைப்பினர்உலகின் வேறு நாடுகளுக்கு சென்றுபயிற்சி பெற்றிருப்பதாக செய்திகள்வெளிவந்திருக்கின்றன.

அத்துடன் இந்த தாக்குதல்களுக்குசர்வதேச பயங்கரவாத அமைப்பானஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர்கள்உரிமைகோரி இருக்கின்றார்கள்.

அத்தோடு சர்வதேச பயங்கரவாதஅமைப்புக்களுடன் தாக்குதல் நடத்தியஅமைப்புக்கு தொடர்பிருப்பதாகபுலனாய்வுப் பிரிவுஉறுதிப்படுத்தியிருக்கின்றது எனவும்குறிப்பிட்டுள்ளார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts