உள்நாடு | குற்றம் | 2019-06-03 06:15:09

யாழில் 8 முஸ்லீம் வர்த்தகர்களுக்கு சிறை தண்டனை

பாறுக் ஷிஹான்

இராணுவ சீருடைக்கு சமனான கெமா என்றழைக்கப்படும் உடுதுணிகளை சட்டவிரோதமாக விற்பனை செய்ததாக 8 முஸ்ஸீம்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் ஒத்திவைக்கப்பட்ட ஒரு மாதம் சிறைத்தண்டனை வழங்கி பருத்திதுறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி நளினி சுபாகரன் உத்தரவிட்டுள்ளார்..

பருத்திதுறை பொலிஸாரினால் கடந்த செவ்வாய்க்கிழமை(14) விசேட தேடுதலின் போது நகரப்பகுதி கடைகளில் குறித்த உடுதுணிகள் விற்பனைக்காக காட்சிபடுத்தி இருந்த குற்றத்திற்காக காத்தான்குடி பகுதியை சேர்ந்த 8 வியாபாரிகள் கைது செய்யப்பட்டு பதில் நீதிவானினால்  பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

பின்னர்  வெள்ளிக்கிழமை(31) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் 8 வியாபாரிகளுக்கும் ஒரு மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.

இவ்வாறு கைதான 8 முஸ்லீம் வர்த்தகர்களும் சிறுவர்களுக்கான ஆடைகளை விற்பனை செய்பவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது..

பொலிஸாரினால் இவர்கள் வசம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட கெமா உடுதுணி சிறுவர்களுக்கானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts