வெளிநாடு | அபிவிருத்தி | 2019-05-26 10:12:18

கடலுக்கு அடியில் சுற்றுலா செல்லும் நீர்மூழ்கி வாகனத்தை உபேர் நிறுவனம் வடிவமைத்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த சர்வதேச போக்குவரத்து நிறுவனமான உபேர், வாடகைப் போக்குவரத்துத் துறையில் பல்வேறு சாதனையை படைத்து வருகிறது.

கார், ஹெலிகாப்டர் போன்றவற்றை வாடகைக்கு அந்நிறுவனம் கொடுத்து வருகிறது. இந்நிலையில் முதல் முறையாக கடலுக்கு அடியில் சுற்றுலா செல்லும் நீர்மூழ்கி வாகனத்தை உருவாக்கி வெற்றிகரமாக சோதித்து பார்த்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியிலுள்ள கிரேட் பேரியர் ரிப் எனப்படும் உலகின் மிகப்பெரிய பவளப்பாறை பகுதியை கடலுக்குள் சென்று காணும் வகையில் வாகனமொன்றை உபேர் நிறுவனம் வடிவமைத்துள்ளது.

இந்த நீர்மூழ்கி வாகனத்துக்கு S.C உபேர் என பெயரிடப்பட்டுள்ளது. கடலுக்குள் சுமார் 20 மீட்டர் ஆழம் வரை செல்லும் அந்த வாகனத்தில் 2 பேர் பயணிக்கலாம்.

இந்த நீர்மூழ்கி வாகனத்தில் பயணிக்க நபரொன்றுக்கு $1,000 ( சுமார் ஒரு லட்சத்தி 75 ஆயிரம் ) கட்டணமாக அறவிட உபேர் நிறுவனம் முடிவு செய்துள்ளது.


Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts