வெளிநாடு | குற்றம் | 2019-05-13 06:57:17

கிருஸ்தவ தேவாயத்தை தீ வைத்ததில் 6 பேர் பலி

மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா ஃபாசோவின் வடக்குப்பகுதியில் டாப்லோவில் உள்ள ஒரு தேவாலயத்தில் துப்பாக்கி ஏந்திய ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தியதில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். 

அவர்களில் அந்த தேவாலயத்தின் பாதிரியாரும் உள்ளடங்குவதோடு, தாக்குதல் நடந்தபோது வழிபாடு நடந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

உள்ளூர் நேரப்படி (12) காலை 9 மணிக்கு இந்தத் தாக்குதல் நடந்தது. 

20 முதல் 30 வரையிலான எண்ணிக்கையில் இருந்த தாக்குதல்தாரிகள் தேவாலயத்துக்கு தீ வைத்தனர். 

பிற கட்டடங்களுக்குத் தீ வைக்கப்பட்டு, ஒரு மருத்துவ மையமும் சூறையாடப்பட்டதாக அந்த நகரின் மேயர் ஊஸ்மன் ஜோங்கோ தெரிவித்துள்ளார். 

2016 முதல் ஜிஹாதிய வன்முறை அதிகம் நடந்துவரும் புர்கினோ ஃபாசோவில், கடந்த ஐந்து வாரங்களில் தேவாலயங்களை குறிவைத்து நடத்தப்படும் மூன்றாவது தாக்குதல் இதுவாகும்.


Related Posts

Our Facebook

Popular Posts