ஆரோக்கியம் | அபிவிருத்தி | 2019-05-11 22:43:44

-கல்முனை பிராந்திய மார்பு நோய்ச் சிகிச்சை நிலைய வைத்தியர் விடுதி திறப்பு விழா

(எம்.எம்.ஜபீர்)

கிழக்கு மாகாண சபையின் PSDG நிதி ஒதுக்கீடில் கல்முனை பிராந்திய மார்பு நோய்ச் சிகிச்சை நிலையத்தின் புதிய அமைக்கப்பட்ட வைத்தியர்  விடுதி நேற்று திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வு கல்முனை பிராந்திய மார்பு நோய்ச் சிகிச்சை நிலையத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி  டாக்டர் சனுஸ் காரியப்பர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர்  எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கட்டிடத்தினை திறந்து வைத்தார்.

இதில் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.முஹம்மட் நௌஷாட், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம். அன்சர், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எம்.எம்.ஹனீபா, சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள், வைத்தியர்கள், பள்ளிவாசல் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது நாட்டில் பயங்கரவாதக் குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த உறவுகளுக்காக எழுந்து நின்று இரண்டு நிமிடம் சுய பிராத்தனையும் இடம்பெற்றது. 


Related Posts

Our Facebook

GENERAL ELECTION-2020 - DIGAMADULLA DISTRICT

GENERAL ELECTION-2020 -DIGAMADULLA DISTRICT

GENERAL ELECTION-2020

Popular Posts