வெளிநாடு | பொருளாதாரம் | 2019-04-25 11:58:47

தென்னாபிரிக்காவில் பாரிய வெள்ளம்: 60 பேர் உயிரிழப்பு

தென்னாபிரிக்காவில் ஏற்பட்ட பாரிய வௌ்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி குறைந்தது 60 பேர் உயிரிழந்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தென்னாபிரிக்காவின் டேர்பன் நகர் மற்றும் க்வாஸுலு நேட்டல் மாகாணம் என்பன இந்த வௌ்ள அனர்த்தத்தால் பாரிய பாதிப்பைச் சந்தித்துள்ளன.

பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட அந்நாட்டு ஜனாதிபதி சிறில் ரமபோஷா, 1000க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தென்னாபிரிக்காவின் தெற்கு மற்றும் கிழக்குப் பிராந்தியங்கள் கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் கடும் மழை காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


Related Posts

Our Facebook

Popular Posts