உள்நாடு | அபிவிருத்தி | 2019-02-07 13:53:05

யாழில் தேசிய மாணவர் படையணி மீள உருவாக்க இலங்கை பொலிஸ் நடவடிக்கை

பாறுக் ஷிஹான்  

யாழ் மாவட்டத்தில்  பொலிஸ்  தேசிய மாணவர் படையணி மீள உருவாக்க நடவடிக்கையில்  இலங்கை  பொலிஸ்    ஈடுபட்டுள்ளது.

இலங்கை பொலிஸ் பயிற்சி கல்லூரி பணிப்பாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்னவின் வழிகாட்டலில் புதன்கிழமை(6)   குறித்த  மாணவர் படையணியை யாழில்  மீள உருவாக்க நடவடிக்கையில்  இலங்கை பொலிஸ் கல்லூரி பொலிஸ் அத்தியட்சகரும்  ஆயுத பயிற்சி மற்றும் இலங்கை பொலிஸ் தேசிய மாணவர் படையணி பொறுப்பாளருமான  சிந்தக குணரட்ன  உப பொலிஸ் பரிசோதகர் சூரியகுமார் சொரூபன் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

மேற்படி படையணி  யாழ் மாவட்டத்தில் மீள உருவாக்க ஆரம்ப நிகழ்வில்  யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி  யாழ் சென்ஜோன்ஸ் கல்லூரி  யாழ்ப்பாணம் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி என்பன   இணைக்கப்பட்டு வழிகாட்டல் நிகழ்வுகள்  சிறப்பாக நடைபெற்றன. 

இதன் போது மேற்குறித்த நிகழ்வு  யாழ் இந்துக்கல்லூரி அதிபர்  ச. நிமலன் யாழ் சென்ஜோன்ஸ் கல்லூரியின் அதிபர் அருட்சகோதரர் எல்.டி.ஞானப்பொன்ராஜா யாழ் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி அதிபர் த.அம்பலவாணர் ஆகியோரது தலைமையில் கட்டம் கட்டமாக  நடைபெற்றது.

இதன் போது பொலிஸ் தேசிய மாணவர் படையணி  நிகழ்வில் பழைய மாணவர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் பாடசாலை ஆசிரியர்கள் அதிகளவான மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

இதன் போது   பொலிஸ் கல்லூரி பொலிஸ் அத்தியட்சகரும்  ஆயுத பயிற்சி மற்றும் இலங்கை பொலிஸ் தேசிய மாணவர் படையணி பொறுப்பாளருமான  இந்தக குணரட்ன  தனது உரையில்

அண்மைக்காலமாக இலங்கையில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பில் இளையவர்கள் ஈடுபட்டுள்ளனர்.அதிலிருந்து அவர்களை மீட்பதற்கு இவ்வாறான படையணியை தற்போது செயற்படுத்தி உள்ளோம்.இதனால் குறித்த போதைப்பொருள் பாவனையில் இருந்து விடுதலை பெறவும்  எமது மாணவர்களை பல்கலை   உயர் பட்டப் படிப்பிற்கு அழைத்து செல்ல உதவும் இசட் புள்ளிகளை அதிகரிகரித்து கொள்ளுவதற்கும்   பாடசாலையிலிருந்து சமூகத்திற்கு நற்பிரஜையாக மாற்றி வழிகாட்டுவதற்கும் இப்படையணி உதவும்.

மேலும் மாணவர்களிடையே தலைமைத்துவத்தினையையும்  ஒழுக்கத்தினையும் சிறந்த ஆளுமையை வெளிப்படுத்தும் நோக்கத்துடன் இப்படையணியில்  பாடசாலை மாணவர்கள் இணைக்கப்பட்டு அறிவு ஆற்றல் திறமை போன்ற விடயங்களின் ஊடாக அவர்களது  ஆளுமையை விருத்தி செய்வதே இதன் நோக்கமாகும் என தெரிவித்தார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts